
filter: 109; fileterIntensity: 0.8; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 5767168;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 41;
தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்ட சிற்றுந்து இயக்க புதிய அனுமதி திட்டத்தின் கீழ் இயக்க புதிய அனுமதிக்கான விண்ணப்பம் ஆன்லைன் மூலம் நடைபெற்று.
தென்காசி மாவட்டத்தில் 43 வழித்தடங்களில் சிற்றுந்து இயக்க விண்ணப்பங்கள் பெறப்பட்டு முடிந்த நிலையில் அதற்கான விண்ணப்பித்த சிற்றுந்து உரிமையாளர்கள் முன்னிலையில் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தலைமையில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு சிற்றுந்துக்கான வழித்தடங்கள் ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில் இதற்கான கூட்டம் நடைபெற்று முடிந்த பின்னர் தென்காசி மாவட்ட சிற்றுந்து உரிமையாளர் சங்க செயலாளர் நவநீதகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் சிற்றுந்துக்கான வழித்தடங்களுக்கு பெற்ற விண்ணப்பங்களுக்கு குலுக்கல் முறையில் வழித்தடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு அரசு தங்களுக்கு சிற்றுந்து திட்டம் வழங்கியதாகவும் மேலும் தற்போது மைக்ரோஸ்கீம் மூலம் கூடுதல் சிற்றுந்துகள் இயக்க மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்ததாகவும் கோரிக்கையை கேட்ட மாவட்ட ஆட்சியர் புதிய வழித்தடங்கள் வழங்கப்பட்டாலும் பழைய வழிதடங்களில் பேருந்து இயக்க இடையூறு இல்லாத வகையில் வசதிகள் செய்து தருவதாகவும் கூறியதாக மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்தனர்.