
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, நகர்புற உட்கட்ட மைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில்,உடையார்பாளையம் முதல்நிலை பேருராட்சி க்குட்பட்ட புல எண்.377 மற்றும் 378-ல் தூய்மை இந்தியா இயக்கம் 2.0 திரவக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் ரூ.380 இலட்சம் மதிப்பீட்டில் கழிவு நீர் சுத்தகரிப்பு நிலையம் அமைத்தல் பணியினைபோக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தலைமையேற்று, மாவட்டஆட்சியர்பொ.இரத்தினசாமி, ஜெயங் கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ஆகியோர் முன்னிலையில் துவங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வார்டு எண்.15-ல் ரூ.60 இலட்சம் மதிப்பீட்டில் சோழங்குறிச்சி ரோடு முதல் என்.ஆர்.பள்ளி வரை தார் சாலை அமைத்தல் பணியினையும், வார்டு எண்.4-ல் ரூ.35.50 இலட்சம் மதிப்பீட்டில் இருளர் தெருவில் பேவர் பிளாக் சாலை அமைத்தல் பணியினையும், வார்டு எண்.6-ல் ரூ.36.50 இலட்சம் மதிப்பீட்டில் வேலப்பச்செட்டி ஏரி முதல் மயானம் வரை பாலத்துடன் கூடிய தார்சாலை அமைத்தல் பணி யினையும்போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் துவக்கி வைத்தார். மேலும், பணிகளை உரிய காலத்திற்குள் தரமான கட்டுமானப் பொருட்களை கொண்டு விரைவாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்குஅறிவுறுத்தினார்.இந்நிகழ்வில் உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஷீஜா, உதவிசெயற்பொறியாளர்.தமயந்தி, வட்டாட்சியர் சம்பத்குமார்,ஒன்றிய திமுக செயலாளர் தனசேகர், உடையார்பாளையம் பேரூராட்சி தலைவர்மலர்விழிரஞ்சித்குமார்,பேரூர் கழக திமுக செயலாளர் கோபாலகிருஷ்ணன் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் இதர அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.