
வால்வோ கார் இந்தியா (Volvo Car India), புதிய எக்ஸ்.சி.90 மாடல் காரை
அறிமுகப்டுத்தியுள்ளது. இதன் விலை ரூ. 1,02,89,900 (எக்ஸ் ஷோரூம் பிரைஸ்). புதிய
எக்ஸ்.சி.90 மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் நவீன வடிவமைப்பு உள்ளிட்ட
அம்சங்களைக் கொண்டு, சொகுசு எஸ்.யு.வி.க்களுக்கு ஒரு புதுமையான
அளவுகோலை நிர்ணயித்துள்ளது. மேலும் விருது பெற்ற, அதிகம் விற்பனையாகும்
எஸ்.யு.வி. மாடலின் மேம்படுத்தப்பட்ட அம்சமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. புது
டெல்லியில் உள்ள ஸ்வீடன் தூதரகத்தில், இந்தியாவுக்கான ஸ்வீடன் தூதர் திரு.
ஜான் தெஸ்லெஃப் (Mr. Jan Thesleff) மற்றும் வால்வோ கார் இந்தியாவின் நிர்வாக
இயக்குநர் திரு. ஜோதி மல்ஹோத்ரா (Mr. Jyoti Malhotra) ஆகியோர் முன்னிலையில்
இந்த அறிமுக விழா அண்மையில் நடைபெற்றது.
“மிகவும் பிரபலமான எஸ்.யு.வி. சின்னமாக நீண்டகாலமாக நிறுவனத்தின் வெற்றிக்
காரணிகளில் ஒன்றாகவும், இந்தியச் சந்தையில் அனைவராலும் விரும்பப்படும்
மாடலாக எக்ஸ்.சி.90 விளங்குகிறது. இந்த எஸ்.யு.வி. காரானது ஸ்வீடிஷ்
வடிவமைப்பு (Swedish luxury) மற்றும் சொகுசு அம்சங்கள் பலவற்றை
உள்ளடக்கியதாக வந்துள்ளது. வால்வோ பிராண்டின் தனிச் சிறப்புகளான புதுமை
மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் இதில் உள்ளன. இந்தக் கார் இணையற்ற வசதி,
விசாலமான தன்மை, பல்துறை மற்றும் திறன் ஆகியவற்றை வழங்குகிறது. அதன்
புத்துணர்ச்சியூட்டும் சமகால வெளிப்புற வடிவமைப்பு சாலைகளில் அதன் இருப்பை
மேலும் வலுவுள்ளதாக்குகிறது” என்று வால்வோ கார் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக
இயக்குநர் திரு. ஜோதி மல்ஹோத்ரா குறிப்பிட்டார்.
இது குறித்து இந்தியாவுக்கான ஸ்வீடன் தூதர் திரு. ஜான்தெஸ்லெஃப் கூறுகையில்,
“இந்தியாவிற்கும் ஸ்வீடனுக்கும் இடையிலான நீடித்த நட்பு, வளர்ந்து வரும்
பொருளாதார மற்றும் தொழில்நுட்ப உறவுகள் மற்றும் கொள்கைகளை அவர் பகிர்ந்து
கொண்டார். வளர்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் ஸ்வீடனின் அர்ப்பணிப்பு புதிய
வால்வோ எக்ஸ்.சி.90 மாடலில் வெளிப்படுகிறது. ஸ்வீடிஷ் தரத்தில் இந்த எஸ்.யு.வி.
காரின் தனித்துவமான ஆடம்பரம், பாதுகாப்பு, செயல்திறன் ஆகியவை இந்திய
நுகர்வோரை ஈர்க்கும்” என்று கூறினார்.
சமரசம் செய்யாத பாதுகாப்பு தர நிலைகள்:
ஒவ்வொரு வால்வோவைப் போலவே, புதிய எக்ஸ்.சி.90 சாலையில் பாதுகாப்பான
வாகனங்களில் ஒன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு வலுவான பாதுகாப்பு
கூண்டு மற்றும் செயலில் உள்ள பாதுகாப்பு தொழில்நுட்பங்களின் விரிவான
வரிசையைக் கொண்டுள்ளது. இதில் பயணம் செய்வோர் மற்றும் சாலையைப்
பயன்படுத்துவோரின் பாதுகாப்பையும் உறுதி செய்கிறது.
ரேடார் மற்றும் முன்புற கேமராவைப் பயன்படுத்தி, புதிய எக்ஸ்.சி.90 ஆனது
தற்செயலான லேன் (Lane) சறுக்கல்களைக் கண்டறிந்து வாகனத்தைத் தானாகவே
அதன் பாதையில் திருப்பி, சாத்தியமான மோதல்களைத் தடுக்கும். மற்ற வாகனங்கள்,
பாதசாரிகள், சைக்கிள் ஓட்டுபவர்கள் மற்றும் பெரிய விலங்குகளைக் கண்டறிந்து
எதிர்வினையாற்றக்கூடிய ரன் ஆஃப் (Run-off) சாலை தணிப்பு மற்றும் மோதல்
தவிர்ப்பு அமைப்புகளும் இதில் உள்ளன.புதிய வடிவில் பாரம்பரிய சொகுசு:
புதிய எக்ஸ்.சி.90 இணையற்ற ஓட்டுநர் அனுபவத்தை வழங்குகிறது. இது விதி
விலக்கான இருக்கை வசதி மற்றும் மேம்படுத்தப்பட்ட சஸ்பென்ஷனால் சொகுசான
பயணத்திற்கு உத்திரவாதம் அளிக்கிறது. இதில் உள்ள தனிப்பட்ட டேம்பர்கள்
(Dampers) நிகழ்நேர சாலை நிலைமைகளுக்கு இயந்திரத்தனமாக
மாற்றியமைக்கின்றன. நம்பிக்கையான மற்றும் நிதானமான பயணத்திற்கு இது உறுதி
அளிக்கிறது.