
பேட்மாநகரத்தில் முகைதீன் ஜாமியா மஸ்ஜித் பள்ளிவாசல் இ-காணிக்கை திட்ட துவக்க விழா நடைபெற்றது.பேட்மாநகரத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் லோன் மேளா மற்றும் அதே பகுதியில் உள்ள முகைதீன் ஜாமியா மஸ்ஜித் பள்ளிவாசலில் இ காணிக்கை திட்ட துவக்க விழா நடைபெற்றது. வங்கியில் நடைபெற்ற லோன் மேளா நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்கள், தங்க நகை குறித்து ஆர்பிஐ புதிதாக வெளியிட்டுள்ள விதிமுறைகளால் ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினர். இதற்கு வங்கியின் மண்டல மேலாளர் லட்சுமி நரசிம்மன் பதில் அளித்து பேசுகையில், தமிழகம் முழுவதிலும் இதே நிலைமை உள்ளதாகவும் இதுகுறித்து ஆர்பிஐ கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, வங்கியின் அருகில் உள்ள முகைதீன் ஜாமியா மஸ்ஜித் பள்ளிவாசலில் இ-காணிக்கை திட்டத்தை வங்கியின் மண்டல மேலாளர் லட்சுமி நரசிம்மன் துவங்கி வைத்தார். இந்நிகழ்வுகளில், முகைதீன் ஜாமியா மஸ்ஜித் தலைவர் முகமது அலி, பாஜக மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.எஸ்.சங்கர் மற்றும் பள்ளிவாசல் நிர்வாகிகள், வங்கி பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.