
திருவெண்ணெய்நல்லூரில் திமுக சார்பில் அப்துல் பாரி மஸ்ஜித் மஸ்ஜிதேநூர் சுன்னத் ஜமாத்தில் இஃப்தார் விருந்து நடந்தது. இதற்கு முத்தவள்ளி தெளலத்கான் தலைமை தாங்கினார். செயலாளர் ஷேக் உசேன், பொருளாளர் ஜமீல் உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மௌலானா ஷேக் சத்தார் ஹசனி அனைவரையும் வரவேற்றார். விழுப்புரம் திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பொன்.கௌதம சிகாமணி இஃப்தார் விருந்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார். இதில் மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், நகர செயலாளர் பூக்கடை கணேசன், ஒன்றிய செயலாளர் பி.வி.ஆர்.விசுவநாதன், ஒன்றிய சேர்மன் ஓம்சிவசக்திவேல், பேரூராட்சி மன்ற தலைவர் அஞ்சுகம் கணேசன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ஜோதி, செந்தில் முருகன், சையது நாசர், விஜயபாபு, கிருஷ்ணராஜ், பாபு, சரவணக்குமார், ராஜாராமன், சலீமா தாஜுதீன், சதாம் காதர் உசேன், சக்திவேல், ஜோதி, செல்வம், அறிவழகன், அரங்கநாதன், ஷாஜகான், ரகு, பாக்யராஜ், சுரேஷ் வெற்றிவேல் செழியன், யாசர், தண்டபாணி, மகேந்திரன், அய்யனார், ரமா.ரமேஷ், சுரேஷ், ரமேஷ், சிறுவா.மணி, வீர.ரமேஷ், சுலைமான் உள்ளிட்ட திமுக சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட இஸ்லாமிய பெருமக்கள் பலர் கலந்து கொண்டனர்.