
சென்னை தியாகராயநகரில் உள்ளமேஸ்டாடா நிறுவனத்தினர்பள்ளி குழந்தைகளை ஊக்கு விக்கும் வகையில் மாணவர்களுக்கு அவ்வப்போது கல்வி உபகரணங்கள் வழங்கி உற்சாகப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் திருவாலங்காடு ஒன்றியத்தில் அடங்கிய மாமண்டூர் கிராம பள்ளி மாணவர்களுக்கு இந்த நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது .இதில் மேஸ்டாடா நிறுவனத்தின் சார்பில் கே. விஜயா கலந்துகொண்டு மாணவ. மாணவியர்பயன் பெறும் வகையில் மடிக்கணிணிகளை வழங்கி சிறப்பித்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக திருவாலங்காடுவட்டார கல்வி அலுவலர் ஸ்ரீ லதா கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார் முன்னதாக. தலைமை ஆசிரியர் லீலா அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அம்சா மற்றும் பள்ளி உதவி ஆசிரியர் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர் மடிக்கணினிகள் வழங்கியதோடு மேசை நாற்காலிகள் மற்றும் தளவாட சாமான்களும் வழங்கினர். இது போன்ற கல்வி வளர்ச்சிக்கு உதவி செய்கிற நிறுவனங்களை பாராட்டுவதாகவும் வரவேற்பதாகவும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அம்சா மற்றும் கிராம பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.