
குளிர்காலத்திலிருந்து வசந்த காலத்திற்கு (கோடை காலம்) நாம் மாறும் போது, பருவ கால ஏற்றத்தாழ்வுகளை தடுக்க நமது உடலுக்கான சமச்சீர் உணவின் முக்கியத்துவத்தை ஆயுர்வேதம் வலியுறுத்துகிறது. இந்த காலம் வாதம், பித்தம் மற்றும் கப தோஷங்களை ஏற்படுத்தி, நோய் பாதிப்பை ஏற்படுத்துகிறது. வெயில் மற்றும் கடும் வெப்பம் காரணமாக நமது உடலில் நீர் சத்து குறைந்து வறட்சி ஏற்பட்டு, அது சுவாசப்பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது. இதற்கிடையில், ஏற்ற இறக்கமான வெப்ப நிலை செரிமானத்தை பலவீனப்படுத்தி, நச்சு பொருட்களை உடலுக்குள் சேர்த்து, நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கிறது. இவற்றை தடுத்து உடலை ஆரோக்கியமாக பராமரிக்க 7 நாள் சமச்சீர் ஆயுர்வேத உணவு முறை அவசியம் என்று ஆயுர் வேத சிகிச்சை நிபுணர் டாக்டர் மதுமிதா கிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் விரிவாக கூறுகையில், இந்தக்காலக் கட்டத்தில் ஆரோக்கியமாக இருக்க, சூடான, நன்கு சமைத்த உணவுகளை சாப்பிட வேண்டும். ஒரு ஆயுர்வேத நிபுணராக நான் வலியுறுத்துவது என்னவென்றால், வீட்டில் நெய், காய்கறி சூப்கள், பருவகால கீரைகள் மற்றும் ஒரு கைப்பிடிபாதாம் என இயற்கையாக புரதம் நிறைந்த உணவுகளை உங்கள் தினசரி உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இந்த பருவத்தின் கணிக்க முடியாத தன்மையானது,காலையில் குளிராக துவங்கி மதிய வேளையில் கடும் வெப்பமாக மாறுகிறது. இதன் காரணமாக நாம் சமச்சீரான உணவு முறையை கடைபிடிப்பதில்லை. குளிர்ச்சியான பருவ நிலையில் எண்ணெயில் வறுத்த உணவுகளை நீங்கள் அதிகம் விரும்பலாம், அதே நேரத்தில் வெப்பநிலை அதிகரிக்கும் போது குளிர்ந்த பானங்கள் மற்றும் ஐஸ்கிரீம்களை நீங்கள் விரும்பிச் சாப்பிடலாம். இது போன்ற, சமநிலையற்ற உணவு செரிமானத்தை சீர்குலைத்து, உடலில் வீக்கம், சோர்வு அல்லதுபருவ கால நோய்களை ஏற்படுத்தும். எனவே நன்கு திட்டமிடப்பட்ட 7 நாள் ஆயுர்வேத உணவு முறையை கடைபிடிக்கும்போது, அது பருவகால நோய்கள் வராமல் தடுத்து, உடலுக்கு ஊட்டமளிக்கும், சுவையான உணவை அனுபவிக்க உதவும். காலை உணவாக உடலுக்கு நாள் முழுவதும் ஆற்றலை அளிக்கும், வைட்டமின் பி2 மற்றும் மெக்னீசிய ம்நிறைந்த தயிருடன் கூடிய வெந்தய சப்பாத்தி.மதிய உணவாக பலாக்-பன்னீர் காய் கறியுடன் பஜ்ரா ரொட்டி, புதிய காய்கறி சாலட், மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இயற்கை புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த ஒருகை பிடி கலிபோர்னியா பாதாம் இரவு உணவாக நெய், சீரகம் மற்றும் கருப்பு மிளகு சேர்த்து சமைத்த பாசிப்பருப்பு கிச்சடி, வேகவைத்த பீட்ரூட் மற்றும் கேரட் சப்ஜியுடன் சாப்பிட வேண்டும். இது இரவில் தசைமீட்புக்கு உதவும். நாள் 2 காலை உணவாக நார்ச்சத்து நிறைந்த வறுத்த பாதாமுடன் மசாலா ஓட்ஸ் கஞ்சியை ஒரு சிட்டிகை இஞ்சி மற்றும் இலவங்கப்பட்டை சேர்த்து சாப்பிட வேண்டும். மதிய உணவாக: ராஜ்மா கறியுடன் ஜீராஅரிசி, வதக்கிய கீரைகள் இரவு உணவாக கிராம்பு மற்றும் மிளகு போன்ற சாலாப்பொருட்களுடன் பஜ்ராகிச்சடி, பீட்ரூட்ரைத்தாவுடன் எடுத்துக் கொள்ள வேண்டும்.உங்கள் உணவை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து அவர் மேலும் கூறுகையில், உங்கள் தனிப்பட்ட தேவைகள் மற்றும் விருப்பங்களின் அடிப்படையில் மேற்கண்ட உணவுகளை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு நல்ல சம நிலையான உணவு என்பது இனிப்பு, புளிப்பு, உப்பு, கசப்பு, காரம் மற்றும் துவர்ப்பு ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். சூடான எண்ணெயை கொண்டு தொடர்ந்து நீங்கள் உங்கள் உடலுக்கு மசாஜ் செய்யும் போது, அது வாதத்தை சம நிலைப்படுத்தவும், உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும்உதவும். இந்த எளிய ஆயுர் வேத உணவுத்திட்டத்தை பின் பற்றுவதன் மூலம், உங்கள் செரிமான மண்டலம் சிறப்பாக செயல்படுவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.உடலுக்கு ஆரோக்கியமான, ஊட்டமளிக்கும் உணவை சாப்பிடும் அதே வேளையில் பருவகால நோய் பாதிப்பில் இருந்தும் நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம் என்று டாக்டர் மதுமிதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.