
தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர் .கு.பிச்சாண்டி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பாக நடைபெற்ற குரூப் – IV தேர்வு மூலம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆகிய துறைகளுக்கு தேர்வு செய்யப்பட்ட இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் தட்டச்சர் உள்ளிட்ட பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்கள். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ் உடனிருந்தார்கள்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பாக கடந்த 09.06.2024 அன்று ஒருங்கிணைந்த குடிமை பணி தொகுதி -IV (Combined Civil Services Examination – IV (Group IV) போட்டித் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்று, திருவண்ணாமலை மாவட்டத்திற்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில் 11 இளநிலை உதவியாளர்களுக்கும், 15 கிராம நிர்வாக அலுவலர்களுக்கும், 12 தட்டச்சர் என மொத்தம் 38 பணியாளர்களுக்கு பணிநியமன ஆணைகளும், அதேப்போல் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறைக்கு தேர்வு செய்யப்பட்ட இளநிலை உதவியாளர் நிலையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 29 நபர்களுக்கும் மாண்புமிகு தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர் திரு.கு.பிச்சாண்டி அவர்கள் பணி நியமன ஆணைகளை வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் .இரா.இராம்பிரதீபன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் டாக்டர்.மணி மற்றும் அரசு துறைச்சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.