
திருச்சிராப்பள்ளி மாவட்டம், தாத்தையங்கார்பேட்டை ஊராட்சி ஒன்றியம், துளையாநத்தம் ஊராட்சியில் துளையாநத்தம் ஏரி தூர் வாரும் பணிக்கான பூமி பூஜை ஒன்றிய செயலாளர் கே. கே. ஆர். சேகரன் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டாரம்) அந்தோணி தாஸ், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) குணசேகரன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலர் இளமதி, விதைகள் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.