
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியில் இயங்கி வரும் ஐ சி டி பி தொண்டுநிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆனந்தி முனிராஜ் பல்வேறுபட்ட சமூக சேவைகளை கிராம அளவில் மகளிர், இளையோர் மற்றும் குழந்தைகள் வளர்ச்சிக்காக சிறப்புடன் செயல்படுத்தி வருகிறார்.
இவர் அனைவரின் வளர்ச்சிக்கும், வாழ்வாதாரத்திற்கு வழிகாட்டியாகவும், ஊன்றுகோலாகவும் செயல்பட்டு வருவதை பாராட்டி அரக்கோணம் அருந்தமிழ் சங்கம் சார்பில் உலக மகளிர்தினத்தை முன்னிட்டு விருதுவழங்கும் விழா தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களை சார்ந்த சாதனை மகளிருக்காக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் சமூக சேவை பிரிவில் ஒரே மேடையில் சிங்கப்பெண்-2025 மற்றும் அருந்தமிழ் தாரகை 2025 என்ற உயரிய விருது, பதக்கம், பாராட்டுச்சான்றிதழ் ஆனந்தி அவர்களுக்கு அருந்தமிழ் சங்கத்தால் வழங்கப்பட்டது. உடன் இவரின் சாதனைக்கு உறுதுணையாய் இருக்கும் இவரது இளைய சகோதரர் ராஜ்குமார் பொறியியல் கல்லூரி துறை தலைவர்/பேராசிரியர் அவர்களுக்கும் சிறப்பு செய்யப்பட்டு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. பெண்ணாய் பிறந்து தனக்கு வரக்கூடிய தடைகள் அனைத்தையும் உடைத்து சோதனைகள் அனைத்தையும் கடந்து சாதனைப்பெண்மணியாய் நம்மில் வலம் வந்து ஒளி வீசி கொண்டிருக்கும் இவருக்கு ஐ சி டி பி நிறுவன பணியாளர்கள், திட்ட பயனாளர்கள், பொதுமக்கள் நண்பர்கள் அனைவரும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் குவித்து வருகின்றனர். இச்சாதனை பெண்மணி 2024ம் ஆண்டு தமிழ்நாட்டின் சிறந்த 100 ஆளுமைகளில் ஒருவராகதேர்வு செய்யப்பட்டு புதுச்சேரியில் கிரஸ்ட் இந்தியா பவுண்டேசன் சார்பில் நடைப்பெற்ற விழாவில் சமூக சேவைக்கான சிங்கப்பெண் 2024 விருதை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.