
திருவள்ளூர் மாவட்டம்,மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வேளூர்,காணியம்பாக்கம்,மெரட்டூர், திருவெள்ளைவாயல்,வாயலூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக பூத் கமிட்டி கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் சிறுணியம் பலராமன் தலைமையில் முன்னாள் அமைச்சர் பொன்னையன் மற்றும் சென்னை மண்டல தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் வினோத் குமார் ஆகியோர் நேரில் கள ஆய்வு செய்தனர்.வேலூர் சம்பத்,சசிகுமார்,ரோஜா ராஜா,காணியம்பாக்கம் சம்பத் எனும் கிருஷ்ணன்,மெரட்டூர் திருமுருகன்,பச்சையப்பன்,திருவெள்ளைவாயல் அருள்,சங்கர்,வாயலூர் எல்.ஐ.சி.சிவா,எஸ்பி அருள் ஆகியோர் ஏற்பாடு மற்றும் உறுதுணையுடன் நடைபெற்ற கூட்டத்தில் பூத் உறுப்பினர்கள் மற்றும் கிளை செயலாளர்கள் கலந்து கொண்டனர். அதிமுக நிர்வாகிகள் ராகேஷ்,கடப்பாக்கம் ராஜா,என்.ஆர்.கோபால்,இமயம் மனோஜ், கொண்டகரை அமிர்தலிங்கம்,மேலூர் பாஸ்கர்,கத்தி குத்து கந்தன்,சூரி,ஜி.கே.மலையப்பன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.