
அரியலூர் மாவட்டம் ,ஜெயங் கொண்டம் சட்டமன்ற தொகுதி,ஆண்டிமடம் ஒன்றியம்,மருதூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவிற் கிணங்க,பள்ளிக் கல்வித்துறை அரியலூர் மாவட்ட நிர்வாகம்,பள்ளி நிர்வாகம் சார்பில், (நூற்றாண்டு விழா & 2024 – 2025 – 2025 ஆம் ஆண்டிற்கான ஆண்டு விழா,முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா), என முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது .விழாவிற்குவருகை தந்த அனைவரையும்பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொ) க.அபிராமி வரவேற்றார்.மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தின சாமி தலைமை வகிக்க ஜெயங்கொண்டம்சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் முன்னிலை வகித்தார்.விழாவில் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் தொல்.திருமாவளவன், போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு ,பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு,பாராட்டு சான்றிதழ்,பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினர்.இந்நிகழ்வில் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ப.கௌசர்,வட்டார கல்வி அலுவலர்கள், அ.நெப்போலி யன்,சுதன்குமார்,க.சந்திரலேகா,ஆண்டிமடம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் ஆர்.கலியபெருமாள் மற்றும் முன்னாள் தலைமை ஆசிரியர் கள்,இருபால் ஆசிரியர் கள், மாணவ,மாணவிகள் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.