
சேலம் மாவட்டம் நரசோதிப்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியில் மாணவர்களுக்குப் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.”நடந்து முடிந்து கடந்து போனது அனைத்தும் வாழ்க்கையின் அனுபவம். நடக்கப் போவதே வாழ்க்கையின் புதிய ஆரம்பம்”என சைதன்யா பள்ளியின் UKG மாணவர்கள் ஒன்றாம் வகுப்பிற்குச் செல்ல இருக்கின்ற நிலையில் அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் விநாயகா மிஷன் சங்கராச்சாரியார் பல் மருத்துவமனையின் மருத்துவர் டாக்டர் சுனந்தா சிறப்பு விருந்தினராக வருகை தந்து மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கி நிகழ்ச்சியைச் சிறப்பித்தார்.மேலும் பள்ளியின் துணைப்பொது மேலாளர் வெங்கடகிருஷ்ண ரெட்டி, பள்ளியின் முதல்வர் மாலதிராஜா,K5 வகுப்புகளின் முதல்வர் சித்ரா ஆறுமுகம் துணை முதல்வர் பவித்ரா பொறுப்பாளர்கள், மற்றும் ஆசிரியர்களும் , மாணவர்களுக்குப் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.