கள்ளக்குறிச்சி மாவட்டம் ,சின்னசேலம் அடுத்த, வெட்டி பெருமாளகரம் கிராமம் வடக்கு காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்த விவசாயி கணேசன். இவர் ஆடு மாடுகளை வைத்து விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் காலை 9 மணி அளவில் வெறி நாய் ஒன்றுஅவர் வளர்த்து வந்த நான்கு ஆடுகளையும் கழுத்தில் கடித்து குதறி உள்ளது . இதில் மூன்று ஆடுகள் உயிரிழந்த நிலையில் ஒரு ஆடு மட்டும் பிழைத்துக் கொண்டது. இந்நிலையில் கால்நடை மருத்துவர் நேரில் வந்து ஆடுகளை உடற்கூறாய்வு செய்து ,வெறி நாய் கடித்ததை உறுதி செய்தார். மேலும் இந்த வடக்கு காட்டு கொட்டாய் பகுதியில் தொடர்ந்து அருகில் உள்ள வீடுகளிலும் வெறிநாய் அடுத்தடுத்து ஆடு, மாடு மற்றும் கோழிகளை கடித்து வருவது அந்த பகுதி விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்துவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக அவர்கள் கூறுகின்றனர். மேலும் கடந்த இரண்டு மாதங்களாகவே வெறி நாய்கள் சின்னசேலம் மற்றும் அதனை சுற்றியுள்ள நயினார் பாளையம் கருத்தலா குறிச்சி வி. மாமந்தூர் போன்ற கிராமங்களில் உள்ள பொது மக்கள் 30-க்கும் மேற்பட்டவரை கடித்து கால்நடைகளையும் கடித்து அனைவரும் சின்ன சேலம் மற்றும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது
