
தேனி அருகே அரண்மனைப்புதூரில் உள்ள டாக்டர் அம்பேத்கரின் திருவுருவசிலை அமைந்து உள்ளது . சட்ட மேதை அம்பேத்காரின் 135 வது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் சார்பில் அவருடைய திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் .
மக்கள் விடுதலை கட்சியின் தேனி மேற்கு மாவட்ட செயலாளர் பூமிநாதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வில் மக்கள் விடுதலை கட்சியின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
தமிழ்நாடு புதுச்சேரி ஏ ஆர் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் சங்கத்தின் மாநில தலைவர் முருகானந்தம் துணை செயலாளர் மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் செயலாளர் கன்னியரசு ,பொருளாளர் ராஜன் குணசேகரன், தங்கப்பாண்டி, சுருளியப்பன் ராஜேந்திரன் பன்னீர்செல்வம் ஜோதிலிங்கம் வெற்றிவேல் நீதிபதி மற்றும் பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்
டாக்டர் அம்பேத்கர் எம்ப்ளாயீஸ் பெட்ரேஷன்தமிழ்நாடு மின்சார பணியாளர்கள் சங்கம் சார்பில் சங்கத்தின் தலைவரும் மாநில இணைச் செயலாளருமாகிய கஜேந்திரன் தேனி திட்ட செயலாளர் சுருளியப்பன், தென் மண்டல துணைத் தலைவர் முருகேசன் மண்டல துணைத் தலைவர் சிவக்குமார் , முருகேசன் மற்றும் சங்கத்தின் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பாஜக சார்பில் முன்னாள் மாவட்ட தலைவர் வெங்கடேஸ்வரன், மாவட்ட துணைத் தலைவர் பாண்டியராஜன் ஆகியோர் தலைமையில் மண்டல தலைவர் மாய கிருஷ்ணன் ,தேனி ஒன்றிய முன்னாள் பொதுச் செயலாளர் மாரி கண்ணன் ,சிறு குறு தொழில் பிரிவு மாவட்டத் தலைவர் பாஸ்கரன்,தேனி மாவட்ட கலை பிரிவு துணைத் தலைவர் சிலம்பம் பாண்டி , சக்தி கேந்திரா பிச்சைமணி,ஓ பி சி அணி ஒன்றிய தலைவர் வேல்ராஜ், பட்டியல் அணி தங்கப்பாண்டி, வழக்கறிஞர் அணி காளிதாஸ் மற்றும் பாஜக நிர்வாகிகள் சார்பில் மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்கள்
இந்து முன்னணி சார்பில் மாவட்டத் தலைவர் முருகன் ,மாவட்ட செயலாளர் உமைய ராஜ்,ஆகியோர் தலைமையிலும்,தேனி நகர தலைவர்வேல்ஸ் மணி, விக்னேஷ் மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள்பலர் உடன் இருந்தனர்.மத்திய மாநில SC / ST அரசு ஊழியர்கள் மக்கள் கூட்டமைப்பு சார்பில் டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது இந்த நிகழ்வில் கருப்பையா, மாநில மகளிர் அணி மாரியம்மாள் மத்திய மாநில SC/ST அரசு ஊழியர்கள் மக்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் பங்கேற்றனர்