
oppo_0
ரேசன்கடை பணியாளர்கள் 3 நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் முதுகுளத்தூர் தாலுகா அலுவலகம்முன்பு ஆர்ப்பாட்டம்தனர். ராமநாதபுரம் மாவட்ட அளவில் நடைபெற்ற ஆர்ப்பாடத்திற்கு முதுகுளத்தூர் வட்டார தலைவர் ஜோதிமுருகன் தலைமை வகித்தார். தினகரன். மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஞானசேகரன் அனைவரையும் வரவேற்றார்.ஆர்ப்பாட்டத்தில் உணவுப்பொருட்களை பொட்டலமாக வழங்க கோரியும், எடை தராசுடன் பி.டி.எஸ் இணைப்பை ரத்து செய்யக்கோரியும் பொதுவிநியோக திட்டத்திற்கு தனித்துறையை உருவாக்கக்கோரியும் கல்வித்தகுதிக்கேற்ப ஊதியம் வழங்கக்கோரியும். பணியாளர்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்ககோரியும் ஒற்றையில் முறையை நடைமுறைப்படுத்துக் கோரியும் ரேசன்கடைகளுக்கு ஒரே நேரத்தில் உரிய காலத்தில் பொருட்கள் அனைத்தும் வழங்கப்படவேணும். என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் ஆர்ப்பாட்டத்தில் வழிவிட்டான், அமர்நாத், முத்துமாரி புலிகேசவன், கருப்பையா உள்பட பலர் கொன்டனர். முடிவில் பொருளாளர் செல்வம் நன்றி கூறினார்