
உத்திரமேரூர் அருகே அருகே உள்ள ராவத்த நல்லூர் கண்டிகை கிராமத்தில் உள்ள கிருஸ்துவ தேவாலயத்தில் தீண்டாமை கடைபிடிப்பதை கண்டித்து மனு அளித்த தலித் கிருஸ்த்துவர்கள்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த ராவத்த நல்லூர் கண்டிகை பகுதியில் பலதரப்பட்ட சமுதாய மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டிகை பகுதியில் தாழ்த்தப்பட்ட தலித் கிருஸ்த்துவர்களை,நாயுடு சமூகத்தை சார்ந்த கிருஸ்த்துவர்கள் திருச்சபைக்குள் அனுமதிக்காமல் ,
தேர் பவனி புதுநன்மை,திருபலி ஆகியவற்றில் சேர்க்காமல் தீண்டைமையை கடைபிடித்து வந்ததாக கூறப்படுகிறது.
திருவிழா காலங்களில் தேர்பவனி தலித் கிருஸ்த்துவர்கள் பகுதியில் அனுமதிக்காத நிலையில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடத்தனர்.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்,சார் ஆட்சியர்,வட்டாச்சியர் தலைமையில் இரு பிரிவினரையும் அழைத்து சமரசம் செய்ய வேண்டுமென ஆணை பிறப்பித்தது.
செங்கல்பட்டு மறைமாவட்டம் கத்தோலிக்க திருசபையினர் பொதுவான இடத்தில் புதிய இடத்தில் ஆலயத்தை அனைவரும் சமமாக கருதபட வேண்டும் என்ற நிலையில் ஆலயத்தை கட்டி திருபலிகள், திருவிழாக்கள் ,தேர் பவனிகள் நடத்தப்பட்டன.
நாயுடு சமூகத்தை சார்ந்தவர்கள் தங்கள் திருச்சபையில் திருபலி நடத்தப்பட வேண்டும் எனவும்,தலித் மக்கள் பயன்படுத்தும் புதிய ஆலயத்தில் நாங்கள் வரமோட்டோம் என தெரிவித்தனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தங்களுக்கான ஆலயத்தில் திருபலி நடத்த சிலர் அனுமதிப்பதில்லை ஏன் வழக்கு தொடுத்தனர்.
இந்நிலையில் இன்று செங்கல்பட்டு மறைமலை ஆயரை சந்திக்க வந்த தலித் கிருஸ்துவர்கள் எங்களது திருச்சபையில் அங்கத்தினராக இல்லாத நிலையில் இந்த பிரச்சனை குறித்து இருசமுதாய மக்களையும் அழைத்து பேச வேண்டுமென தெரிவித்து மனு அளித்தனர்.