
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வடுகபட்டியில் மிகவும் பழமை வாய்ந்த மார்க்கண்டையா நெசவாளர் நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் மழலை செல்வங்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. முன்னாள் தலைமை ஆசிரியரும் பள்ளி குழு தலைவருமாகிய சுசிலா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் தலைமை ஆசிரியர் ராஜாராம் முன்னிலை வகித்தார். ஆசிரியர் தங்கவேல் பங்கேற்று வரவேற்புரை நிகழ்த்தினார் .சிறப்பு விருந்தினராக ரத்தினவேல்,மணிகண்டன் வரதராஜன் ,சீலா செல்வேந்திரன் மற்றும் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் கல்வியாளர்கள் பங்கேற்று பள்ளியின் வளர்ச்சி குறித்தும் மாணவர்களின் கல்வி வழிகாட்டி குறித்தும், சிறப்புரையாற்றினார்கள்.மேலும் இந்த மழலை செல்வங்களின் பட்டமளிப்பு விழாவில் முதலில் மாணவிகளின் நடனங்களும் கவிதை நிகழ்ச்சிகளும் நடைபெற்றதில் பார்வையாளர்களை கவர்ந்தது .மொத்தம் இந்த பட்டமளிப்பு விழாவில் 35 மாணவர்களுக்கு பட்டமளித்து சிறப்பிக்கப்பட்டது இந்த பட்டமளிப்பு விழாவில் ஆசிரியர்கள் மாணவர்கள் ,மாணவர்களின் பெற்றோர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்