
திருத்தணி பழைய தர்மராஜா கோயில் எனும் புராதன திரௌபதி அம்மன் ஆலயத்தில் வருகிற 11-ம் தேதி தீமிதி திருவிழா நடைபெறுகிறது. நேற்று அதிகாலை சிறப்பு பூஜைகள் நடத்தி மங்கள வாத்தியங்கள் மற்றும் வேத விப்பனர்கள் மந்திரங்கள் முழங்க கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. விழாவை முன்னிட்டு மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தி மஞ்சள் காப்பு சந்தன காப்பு பூஜைகள் நடைபெற்றன தொடர்ந்து அம்மன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். தினசரி பகலில் மகாபாரத சொற்பொழிவுகளும் இரவில் கட்டைக்கூத்து கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. வரும் 11ஆம் தேதி காலையில் துரியோதனன் வதம் எனும்படுகளம் நிகழ்ச்சியும் மாலையில் அக்னிகுண்டத்தில் இறங்கி பக்தர்கள் தீ மிதிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.திருத்தணி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து பல்லாயிரக்கண பக்தர்கள் காப்பு கட்டி விரதமிருந்து தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்த உள்ளனர். விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் பக்தர்கள் இணைந்து சிறப்பாகசெய்து வருகின்றனர்.. மேலும் திருத்தணி அடுத்த பட்டாபிராமாபுரம் கிராமத்திலும் இந்த தீமிதி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.