
Oplus_131072
விழுப்புரம் மாவட்டம் மேல் மலையனூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், வட்டார பஞ்சாயத்து வளர்ச்சி திட்ட (VPDP) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் தயாரிக்கப்பட்ட வளர்ச்சி வரைபடம் வெளியிடப்பட்டது.இந்த நிகழ்வில், மலையனூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் கண்மணி நெடுஞ்செழியன் தலைமையில் அரசு நலத்துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஒன்றிய மக்களின் முன்னிலையில், கிராம ஊராட்சிகளுக்கான சமூக வரைபடம், ஊராட்சி வள ஆதார வரைபடம் மற்றும் வளர்ச்சிக்கான துறைகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது.18 துறைகளின் செயல்பாடுகள் மற்றும் அரசு திட்டங்களின் நோக்கங்கள் குறித்து, 55 கிராம ஊராட்சி பஞ்சாயத்துகளின் வளர்ச்சிகளை உள்ளடக்கிய வகையில், முதன்மை பயிற்றுநர் கலியமூர்த்தி பொதுமக்களுக்கு விளக்கம் அளித்தார்.இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன்,நாராயணமூர்த்தி சாந்தி சுப்பிரமணியன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெய்சங்கர்,ஒன்றிய கவுன்சிலர்கள்,ஊராட்சி மன்ற தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமாக கலந்து கொண்டனர்.இறுதியில் பறையந்தங்கள் ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை நன்றி உரை கூறினார்.