
Oplus_131072
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியம் பொன்பத்தி ஊராட்சியில் மே 1 தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பொன்பத்தி ஊராட்சி மன்ற தலைவர் அனுசுயா மணிபாலன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜன், பிரபா சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊராட்சி செயலாளர் பழனி தீர்மானங்களை வாசித்தார்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், செஞ்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செஞ்சி மஸ்தான்,செஞ்சி ஒன்றிய பெருந்தலைவர் விஜயகுமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.
அப்போது கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் பல்வேறு கோரிக்கை மனுக்களை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம் வழங்கினர்.
கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ.பொது மக்களின் கோரிக்கைகளை துறை சார்ந்த அதிகாரிகளிடம் தெரிவித்து உடனடியாக நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் பேசுகையில் திராவிட மாடல் ஆட்சியில்தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் எல்லோருக்கும் எல்லாம் என்றதொலைநோக்குசிந்தனையுடன் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
குறிப்பாகபெண்களுக்கான பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க ஸ்டாலின் 100 நாள் திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய 400 கோடிரூபாய் வழங்க வேண்டும் என வலியுறுத்தியதையடுத்து ஒன்றிய அரசு 300 கோடி ரூபாயை விடிவித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
கிராம சபை கூட்டத்தில்கலைஞர் கனவு இல்லதிட்டத்தில் தகுதியான பயனாளிகளை தேர்வு செய்தல், கிராம ஊராட்சியில் பொது செலவினம், இணைய வழி மனை பிரிவு மற்றும் கட்டிட அனுமதி வழங்குதல்,வரி மற்றும் வரியில்லா வருவாய் இனங்களை இணைய வழி செலுத்துவதை உறுதிப்படுத்துதல், குழந்தைகள் பாதுகாப்பு கிராம ஊராட்சியில் கொத்தடிமை தொழிலாளர்கள் முறை அனைத்து வகையான தொழில்களில் குழந்தைகள் ஈடுபடுவதில்லை என அறிவித்தல் மற்றும் அனைத்து வணிக நிறுவனங்களிலும் தமிழில் பெயர் பலகை அமைத்தல் தொடர்பான விவரங்கள் கிராம சபையில் தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்தில் விழுப்புரம் மாவட்ட ஊராட்சி செயலர் நடராஜன்,மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை,ஒட்டம்பட்டு ஆரம்ப சுகாதார மருத்துவமனை அலுவலர் முகிலன்,ஒன்றிய கவுன்சிலர் துரை,உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.