
திருச்சிராப்பள்ளி மாவட்டம் தாத்தையங்கார் பேட்டை ஊராட்சி ஒன்றியம் எம். புதுப்பட்டி ஊராட்சியில் மே 1 ம் தேதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுத் துறை சார்பில் சுந்தரம் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். கிராம சபை கூட்ட ஏற்பாடுகளை ஊராட்சி செயலர் ரகுநாதன் சிறப்பாக செய்திருந்தார். அதேபோல் வாளவந்தி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டம் ஒன்றிய பணி மேற்பார்வையாளர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது. கூட்ட ஏற்பாடுகளை ஊராட்சி செயலர் சகுந்தலா சிறப்பாக செய்திருந்தார்.