” ஒவ்வொரு குழந்தை தொழிலாளி உருவாகும் போதும் நாட்டின் சாதனையாளர் ஒருவர் இழக்கப்படுகிறார்” ஆகவே குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலுமாக அகற்றப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்த ஜூன் 12-ம் தேதி குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. சேலம் மாவட்டம் நரசோதிப்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாளன்று அனைத்து ஆசிரியர்களும் குழந்தை தொழிலாளர் இல்லாத சமூகத்தை உருவாக்க உறுதிமொழி ஏற்றனர் .
மேலும் இந்நிகழ்வில் பள்ளியின் துணைப்பொது மேலாளர் .வெங்கடகிருஷ்ணா ரெட்டி அவர்களும், பள்ளியின் முதல்வர் மாலதிராஜா அவர்களும், துணை முதல்வர் ஸ்ரீமதி மற்றும் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
