நீலகிரி மாவட்டம்குன்னூர் நகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 860 மார்க்கெட் கடைகளை இடிக்க நோட்டீஸ் வழங்கபட்டு வருகிறது, சம்பந்தப்பட்ட நகராட்சி கடைகளுக்கு. நோட்டீஸ் வழங்கக் கூடாது என குன்னூர் அதிமுக நகர கழக செயலாளர் சரவணகுமார் தலமையில் எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர், ‘குன்னூரில் மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகள் மிகவும் பழமை வாய்ந்தது என்பதாலும் இடிந்து விழும் அபாயம் உள்ளதாலும் ஏதேனும் உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ரூபாய் 43 கோடி முதல் கட்டமாக ஒதுக்கீடு செய்யப்பட்டு பணி துவங்குவதற்காக பூமி பூஜை போடப்பட்டுள்ளது, நவீன முறையில் பார்க்கிங் வசதிகள் உடன் புதிய மார்க்கெட் கட்ட குன்னூர் நகராட்சி ஆனையாளர் இளம்பருதி ஆணைக்கிணங்க RO சரவணகுமார் , தலமையில் காவல் துறை பாதுக்காப்புடன் கடைகளை 15 நாட்களுக்குள் காளிசெய்ய. நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது, வியாபாரிகள் கூறுகையில் வியாபாரிகள் ஆகிய நாங்கள் என்ன தவறு செய்தோம் காவல்துறையை முன்வைத்து வியாபாரிகளுக்கு நோட்டீஸ் கொடுக்க இதற்கு எதிர்பு தெரிவித்து எதிர்க்கட்சி குன்னூர் நகர கழக செயலாளர் தலமையில் அதிமுக கவுன்சிலர்கள் மற்றும் வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர், மேலும் வியாபாரிகள் கண்ணீர் மல்க . கையெழுத்திட்டு நகராட்சி அலுவலர்களிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்,
