சென்னை நுங்கம்பாக்கம் பொன்னாங்கி புரத்தில் 1879 ஆம் ஆண்டு எழுந்தருளிய அருள்மிகு ஸ்ரீஆதிதுலுக்கானத்தம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம்(ம) பெருஞ்சாந்தி பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அம்மனுக்கும், பரிகார மூர்த்திகளுக்கும் அலங்காரமும் தீபாராதனை பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது. தொடர்ந்துபக்த கோடிகளுக்கு தீபாராதனையும், பிரசாதங்களும் வழங்கப்பட்டது. மேலும்ஆலயத்தைப் பற்றி பரம்பரை அறங்காவலர் ஏழாவது தலைமுறையை சேர்ந்த அருணாச்சலம் கூறுகையில் இக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும் நீண்ட நாட்களாக திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறுதல், குழந்தைவரம் வேண்டுதல், வேலைவாய்ப்பு சம்பந்தமாக வேண்டினால் உடனடியாக நிவர்த்தி ஆவதோடு பக்தர்களுக்கு வேண்டியதை வேண்டியபடி தரும் சக்தி கொண்ட அம்மன் இது. இந்த ஆலயத்திற்கு காஞ்சி மகாபெரியவாள் வந்து சென்றுள்ளார், முன்னாள்முதல்வர் காமராசர், முன்னாள் தமிழக கவர்னர் பிரபுதாஸ் பிட்வால் ஆகியோர் வருகை தந்து தரிசனம் செய்த ஆலயம் இது . ஆண்டுதோறும் ஆடி மாதம் ஐந்தாம் வாரம் திருவிழா மிக விமர்சையாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது, பிரதி மாதம் மூன்றாம் வாரம் விளக்கு பூஜையும், பிரதி வாரம் தேவாரம் ஓதுவதும் போன்றவைகள் நடைபெற்று வருகிறது . 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெற உள்ளது. பக்த கோடிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என கூறினார். மதியம் ஆலயத்தின் சார்பில் பக்தர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
