சேலம் ஸ்ரீ சைதன்யா பள்ளியில் சுற்றுச்சூழல் நாள் கொண்டாடப்பட்டது. “பூமியை, உருவாக்கி, கதிராக்கி, குளிராக்கி,தளிராக்கி,மரமாக்கி, உருமாற்றி, வளமாக்கி வரமாக்கி, வளமுள்ள வண்ண பூமியாய்த் தழைக்கச் செய்து தலைமுறை காத்திடுவோம்” என சேலம் மாவட்டம் நரசோதிப்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியில் சுற்றுச்சூழல் நாள்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. சுற்றுச்சூழல் என்பது மனித வாழ்வுக்குத் தேவையான அனைத்து வளங்களையும் வழங்குகிறது. அப்படிப்பட்ட சுற்றுச்சூழலைப் பேணும் வகையில் ஜூன் 5 சுற்றுச்சூழல் நாளாகக் கொண்டாடப்படுகிறது. சைதன்யா பள்ளியில் நாடகம் மற்றும் நடனம் மூலம் சுற்றுச்சூழலைப் பேணுவதன் அவசியம் குறித்து மாணவ மாணவியர்கள் நடித்துக் காட்டினர். மேலும் ஆசிரிய ஆசிரியைகளும் சுற்றுச்சூழலை மாசுபடாமல் காப்பது பற்றி எடுத்துரைத்தனர்.
சுற்றுச்சூழலைப் பேணிக்காப்போம் என்று மாணவ மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்களும் உறுதிமொழி ஏற்றனர். மேலும் இவ்வருடம் பள்ளியில் புதிதாகப் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் மரக்கன்றுகளைப் பள்ளிக்குப் பரிசளித்தனர்.
மேலும் இந்நிகழ்வில் பள்ளியின் துணைப்பொது மேலாளர் வெங்கடகிருஷ்ணா ரெட்டி அவர்களும், பள்ளியின் முதல்வர் மாலதிராஜா அவர்களும், துணை முதல்வர் ஸ்ரீமதி பொறுப்பாளர்களும் மற்றும் ஆசிரியர்களும் கலந்து கொண்டு மாணவர்களுக்குச் சுற்றுசூழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
