சென்னை, செப்டம்பர் 2025: பெண்கள் நலனுக்கான விரிவான மார்பகப் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்ட, அதிநவீன வசதிகளைக் கொண்ட சென்னை மார்பக மையத்தை (CBC), தி ஹெட் அண்ட் நெக் சென்டர் (THANC) மருத்துவமனை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மையத்தை, சிறப்பு விருந்தினர்கள் நேச்சுரல்ஸ் குழுமத்தின் நிறுவனர் திருமதி வீணா குமாரவேல் மற்றும் சிறந்த பேச்சாளரும், மார்பகப் புற்றுநோயை வென்றவருமான திருமதி நிர்ஜா மாலிக் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்த மார்பக மையம், அனைத்து மார்பகப் பிரச்னைகளுக்கும் மேம்பட்ட மற்றும் விரிவான சிகிச்சைகளை வழங்குகிறது. இங்கு வழங்கப்படும் முக்கிய சேவைகள்:
3D ஜீனியஸ் செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் 3-டி மேமோகிராபி
துல்லியமான நோயறிதலுக்காக, வழிகாட்டலுடன் கூடிய பயாப்ஸிகள், ஆஸ்பிரேஷன் மற்றும் மார்க்கர் இடங்கள்
சாதாரண மற்றும் வீரியம் மிக்க கட்டிகளுக்கு நிபுணத்துவ அறுவை சிகிச்சை
மார்பக அறுவை சிகிச்சைக்குப் பின் உருவம் மற்றும் இயக்கத்தை மீட்டெடுத்தல்
தி ஹெட் அண்ட் நெக் சென்டர் (THANC) மருத்துவமனையின் சென்னை மார்பக மையம், பெண்கள் நலனை மேம்படுத்தவும், மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், செப்டம்பர் 28 வரை இலவச மேமோகிராம் மற்றும் மார்பகப் பரிசோதனைகளை வழங்குகிறது. இந்த இலவச சேவைகளைப் பெற விரும்புபவர்கள் 73977 68795 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.
நாடு முழுவதும் 300க்கும் மேற்பட்ட புற்றுநோய் மையங்கள் இருந்தாலும், மார்பகப் புற்றுநோய்க்கான முழுமையான சிகிச்சைக்கான வசதிகள் குறைவாகவே உள்ளன. நோயாளிகள் பெரும்பாலும் வெவ்வேறு மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை, கீமோதெரபி, ரேடியோதெரபி மற்றும் மறுசீரமைப்பு சிகிச்சைகளை மேற்கொள்ளுதல் என சிகிச்சை முறைகள் துண்டு துண்டாக உள்ளன. மேலும், உளவியல் மற்றும் உணர்வுபூர்வமான ஆதரவு தொடர்ச்சியாகக் கிடைப்பதில்லை. அதிகரித்து வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப, புற்றுநோய் நிபுணர்களின் பற்றாக்குறையும் ஒரு சவாலாக உள்ளது. இது பல பெண்களுக்கு சரியான நேரத்தில் முறையான சிகிச்சை கிடைப்பதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.
இந்தக் குறைபாடுகளைக் கருத்தில் கொண்டு, சென்னை மார்பக மையம், இந்த முக்கியமான இடைவெளியைக் குறைக்க முயற்சி செய்கிறது. இதன் மூலம், நகரின் மையத்தில் ஒரே இடத்தில் ஒருங்கிணைந்த மார்பக பாதுகாப்பு சேவைகளை வழங்கி முழுமையான மார்பகப் பாதுகாப்பு மாதிரியை உருவாக்க விரும்புகிறது.
“சேர்க்கை நுண்ணறிவு ஆற்றல் கொண்ட 3D மேமோகிராபி முதல் நிபுணத்துவ அறுவை சிகிச்சை, மறுசீரமைப்பு மற்றும் கீமோதெரபி வரை, நாங்கள் நோயாளிகளுக்கு விரிவான மற்றும் அதிநவீன மார்பக சிகிச்சையை ஒரே அமைப்பின் கீழ் வழங்குகிறோம்” என்று சென்னை மார்பக மையத்தின் இயக்குநர் டாக்டர் செல்வி ராதாகிருஷ்ணா தெரிவித்தார்.
மருத்துவ சேவைகளுடன், சென்னை மார்பக மையம் நோயாளிகளுக்கான கல்வி மற்றும் சமூக ஈடுபாட்டிற்கும் முக்கியத்துவம் அளிக்கிறது. வழக்கமான விழிப்புணர்வுப் பேரணிகள், குழு கூட்டங்கள் மற்றும் புற்றுநோயை வென்றவர்களால் நடத்தப்படும் ஆலோசனைகள் மூலம் இவை மேற்கொள்ளப்படுகின்றன. இந்த முயற்சிகள், மார்பக ஆரோக்கியம் குறித்த விவாதங்களை மேம்படுத்தவும், சுய பரிசோதனைகள் மூலம் முன்கூட்டியே கண்டறிவதை ஊக்குவிக்கவும், பெண்கள் தங்கள் ஆரோக்கியப் பொறுப்பை ஏற்கவும் உதவுகின்றன.
தி ஹெட் அண்ட் நெக் சென்டர் (THANC) மருத்துவமனை குறித்து:
தி ஹெட் அண்ட் நெக் சென்டர் & ஹாஸ்பிடல் (THANC) என்பது தலை மற்றும் கழுத்து புற்றுநோய்கள், விழுங்குதல், குரல், தைராய்டு, குறட்டை மற்றும் ENT (காது, மூக்கு, தொண்டை) பிரச்னைகளுக்கு சிகிச்சையளிக்கும் ஒரு சிறப்பு மருத்துவமனையாகும். மருத்துவ நிபுணத்துவம், மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் இணைந்தால், சிறந்த நோயாளி பராமரிப்பு மற்றும் சிகிச்சை முடிவுகள் கிடைக்கும். THANC மருத்துவமனை ஒவ்வொரு நோயாளிக்கும் சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்க முயற்சி செய்கிறது. மேலும் நோயால் அவர்களின் வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருப்பதையும் உறுதி செய்கிறது.
