சென்னை, அக்டோபர் 2025: பாரம்பரியமிக்க இந்திய ஆடைகளுக்கான நம்பிக்கைமிக்க பெயராக திகழும் ராம்ராஜ் காட்டன், இன்று தி. நகர் பனகல் பூங்காவிற்கு எதிரே உள்ள அதன் விரிவாக்கப்பட்ட ஷோரூமில் பிரத்யேக ரம்யம் புடவைகள் பிரிவை நடிகை நதியா திறந்து வைத்தார். மேலும் பிரீமியம் சுபாகா பட்டு கலெக்ஷன்களையும் அவர் அறிமுகம் செய்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ராம்ராஜ் காட்டன் நிறுவனர் மற்றும் தலைவர் கே.ஆர். நாகராஜன் மற்றும் நிர்வாக இயக்குனர் பி.ஆர். அருண் ஈஸ்வர், இயக்குனர்கள் சுமதி நாகராஜன் மற்றும் ஆர்த்திகா அருண்ஈஸ்வர் உள்ளிட்ட ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.
திறப்பு விழாவின் சிறப்பு அம்சமாக, பாரம்பரிய நெசவுகளின் செழுமையை நவீன கால பாணியுடன் கொண்டாடும் பிரீமியம் தொகுப்பான சுபாகா பட்டு புடவைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. பருத்தி, கலைநயமிக்க பட்டு புடவைகள், செமி ரா சில்க், செமி டஸ்ஸர், செமி லினன் ஆடைகள், டிஷ்யூ மற்றும் கேரள புடவைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான தொகுப்புகளை உள்ளடக்கி ரம்யம் புடவைகள் உள்ளன. இந்த ஆடைத் தொகுப்பானது பண்டிகை காலங்கள், முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் அன்றாடம் அணிவதற்கு ஏற்றவகையில் அழகிய வடிவமைப்பு மற்றும் காலத்தால் அழியாத நேர்த்தியை ஒன்றிணைத்து தயாரிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் ராம்ராஜ் காட்டன் நிர்வாக இயக்குனர் பி.ஆர். அருண்ஈஸ்வர் பேசுகையில், ரம்யம் புடவைகள் எங்கள் வாடிக்கையாளர்களிடையே மிகவும் விரும்பப்படும் ஒரு தொகுப்பாக இருந்து வருகிறது, இங்கு அதற்கென ஒரு தனிப் பிரிவை துவக்குவதன் மூலம் அதன் பன்முகத்தன்மை மற்றும் கைவினைத்திறனை மிகவும் சிறப்பாக வெளிப்படுத்த முடியும். மேலும் சுபாகா பட்டு கலெக்ஷன் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், பாரம்பரியத்தையும் காலத்தால் அழியாத நேர்த்தியையும் ஒன்றிணைக்கும் ஒரு பிரத்யேக பட்டு அனுபவத்தை எங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அத்துடன் இதன் விளம்பர தூதராக நடிகை நதியாக எங்களுடன் இணைந்து இருப்பது இதற்கு கூடுதல் பெருமை சேர்க்கும் விதமாக உள்ளது என்று தெரிவித்தார்.
இது குறித்து நடிகை நதியா கூறுகையில், பாரம்பரியம் மாறாத அதேபோல் புதுமையான ஆடைகளை நவீன காலத்திற்கு ஏற்ற வகையில் ராம்ராஜ் காட்டன் வழங்கி வருகிறது. பாரம்பரிய ஆடைகளுக்கு புத்துணர்ச்சியூட்டும் வகையில் அதன் பழமை மாறாமல் அதேசமயம் அதை புதுமையாக மக்களிடம் கொண்டு வந்து சேர்க்கிறது. மேலும் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய சுபாகா பட்டு கலெக்ஷன்கள் மிக நேர்த்தியாகவும், அழகாகவும், ஸ்டைலாகவும் இருக்கும் அதே வேளையில் இந்திய கைவினைத்திறனைக் கொண்டாடும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
