அகில இந்திய ஷோபுகாய் கோஜுரியு கராத்தே பள்ளியின் மாநில நடுவர் பயிற்சி முகாம் தலைமை அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நடுவர் பயிற்சியினையும் தேர்வினையும் இந்திய கராத்தே தலைமை பயிற்சியாளர் ரென்ஷி டாக்டர் சுரேஷ்குமார் நடத்திணர் கராத்தே போட்டி நடுவர்களுக்கான விதிமுறைகள், நடுவர் பொறுப்புகள் மற்றும் போட்டி நடத்தும் நடைமுறைகள் குறித்து விரிவான பயிற்சி அளித்தார். இப்பயிற்சி மற்றும் தேர்வில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கராத்தே பள்ளியின் பயிற்சியாளர்கள் கலந்து கொண்டு பயிற்சி எடுத்து தேர்வில் தேர்ச்சி அடைந்தனர். தேர்ச்சி பெற்ற நடுவர்களின் விவரம் செந்தில், பாலாஜி, அங்குவேல், முத்துராஜா, லக்ஷ்மணன், ஆதி, கார்மேகம், பிரதீப் , ஆகாஷ், சந்தோஷ், சக்திவேல், யோவான், ஜெரால்டு ஆகியோர் தேர்ச்சி பெற்றுள்ளனர்
