செங்கல்பட்டு, ஜூலை 01-
தமிழ்நாடுதொழிற்பயிற்சி அலுவலர் சங்கத்தின் 2026 – 27 ஆம் ஆண்டிற்கான மாநில நிர்வாகிகள் தேர்தல் கடந்த 24.06.2026 அன்று தமிழகத்திலுள்ள அனைத்து அரசுதொழிற்பயிற்சி நிலையங்களிலும் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்பட்டது. அதனடிப்படையில் மாநில நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பதவியேற்பு விழா செங்கல்பட்டு அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாநில தேர்தல் ஆணையர் மு.மோகன்தாஸ் தலைமையில் நடைபெற்றது. செங்கல்பட்டு கிளை தலைவர் எ.மோகன்ராஜ் வரவேற்றார் மாநில தலைவர் எம்.சீனிவாசன், துணைத்தலைவர் கே.கார்த்திகேயன், பொதுச்செயலாளர் என்.ரமேஷ், செயலாளர் டி.சேகர், அமைப்பு செயலாளர் ஆர் ஸ்ரீபதி, பொருளாளர் என்.திருநாவுக்கரசு, திருச்சி மண்டல செயலாளர் சி .அஜய்ராஜ் , மதுரை மண்டல செயலாளருக்கு கே.முத்துவேல் ஆகியோர் இவ்விழாவில் மாநில நிர்வாகிகளாக பதவி ஏற்றுக்கொண்டனர்.
இவ்விழாவில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.பாஸ்கரன், தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்கத்தின் முன்னாள் மாநிலத்தலைவர் சி.ராமலிங்கம் நகராட்சி மாநகராட்சி ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் மு தாமோதரன், தமிழ்நாடு அரசு உழியர் சங்கத்தின் செங்கல்பட்டு மாவட்ட தலைவர் விக்டர்சுரேஷ் குமார் உள்ளிட்ட பலர் வாழ்த்தி பேசினார்
