இராணிப்பேட்டை ரோட்டரி சங்கத்தின் 2026–27 தலைவர் மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா சிறப்பாக நடைபெற்றது
இராணிப்பேட்டை ரோட்டரி சங்கத்தின் 2026–27 ஆம் ஆண்டிற்கான தலைவர் மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா, இராணிப்பேட்டை ரோட்டரி யூத் சென்டரில் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் ரோட்டேரியன் ஆ. புவனலட்சுமி அவர்கள் 2026–27 ஆம் ஆண்டிற்கான தலைவராக பதவியேற்றுக் கொண்டார். அவருடன் புதிய நிர்வாகக் குழு உறுப்பினர்களும் பதவியேற்றனர்.
விழாவில் முன்னாள் மாவட்ட ஆளுநர் ரோட்டேரியன் பி.டி.ஜி. வி. ராஜா சீனிவாசன் அவர்கள் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு, புதிய தலைவருக்கும் நிர்வாகிகளுக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்து வாழ்த்துரை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ரோட்டரி நிர்வாகிகள், பல்வேறு ரோட்டரி சங்கங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள், ஊடக நண்பர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு புதிய நிர்வாகக் குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
புதிய தலைவர் ரோட்டேரியன் ஆ. புவனலட்சுமி அவர்கள், “சமூக நலன், கல்வி, சுகாதாரம், இளைஞர் மேம்பாடு மற்றும் மனிதநேய சேவைகளை முன்னிலைப்படுத்தி, ரோட்டரியின் Create Lasting Impact என்ற கருப்பொருளை செயல்படுத்த உறுதிபூண்டுள்ளோம்” என்று தனது ஏற்புரையில் தெரிவித்தார்.
விழா இனிதே நிறைவடைந்ததைத் தொடர்ந்து அனைவருக்கும் இரவு விருந்து வழங்கப்பட்டது.
