வேலூர் மாவட்டம், தமிழ்நாடு ஐ.என்.டி.யு.சி தொழிற்சங்கங்களின் தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜி காளான் 88வது பிறந்த நாளை முன்னிட்டு வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் அமைந்துள்ள பார்வையற்றோர் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வேலூர் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வாஹித்பாஷா தலைமையில் நடைபெற்றது நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு மற்றும் நலதிட்ட உதவிகள் வழங்கினார்.ஐ.என்.டி.யு.சி வேலூர் மாவட்டம் தொழிற் சங்கம் பொறுப்பாளர் ஜின்னா , சிறுபான்மைதுறை உறுப்பினர் குர்ஷித்ஜான் ஆகியோர் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர் உடன் 46வது வார்டு சுரேஷ் மண்டல தலைவர்கள் முனியப்பன் வசிஷ்டர் சுதர்சன் ஐஎன்டியுசி திட்ட செயலாளர் காமராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
