
அரியலூர் ஒன்றியம்
தேளூரில் செயல்பட்டு வரும் திறந்தவெளி நுகர்பொருள் வாணிபக் கழக சேமிப்பு கிடங்கு முன்பு, உள்ளூர் லாரிகளுக்கு சரக்கு ஏற்றும் பணி வழங்காததை கண்டித்து அரியலூர் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் வட்ட தலைவர் நாராயணசாமி தலைமை தாங்கினார். சங்கத்தின் வட்ட செயலாளர் இராமமூர்த்தி ஆர்ப்பாட்டத் திற்கு வருகை தந்த அனை வரையும் வரவேற்றார்.
கந்தசாமி அண்ட் கோ மற்றும் டிடிஎன் சன்ஸ் ஆகிய ஒப்பந்த நிறுவனங்கள், நுகர் பொருள் வாணிப கழகத்தில் சரக்கு ஏற்றும் பணிக்கு உள்ளூர் லாரிகளுக்கே வாய்ப்பு வழங்க வேண்டும், ஓராண்டாக நிலுவையில் உள்ள லாரி வாடகைத் தொகையை உடனடியாக வழங்கி லாரி உரிமையாளர்கள் மற்றும் லாரி ஓட்டுனர்கள் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும், தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிப கழக நிர்வாகம் லாரி உரிமையாளர் களின் நியாயமான கோரிக் கைகள் குறித்து உடனே ஒப்பந்த நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி சங்க நிர்வாகிகள் கோஷங்களை எழுப்பினர்.முடிவில் சங்கத்தின் வட்ட பொருளாளர் சிவக்குமார் நன்றி கூறினார்.
