
விழுப்புரம் ஜூன் 8,மரக்காணம் பாரதியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் அருணாச்சலம் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது..
தமிழ்நாடு தமிழ் சங்கத்தின் சார்பாக மாபெரும் விருது வழங்கும் விழா சென்னையில் உள்ள வேளாங்கண்ணி பள்ளியில் நடைபெற்றது. பல்வேறு ஆளுமைகளுக்கு அவர்களின் சாதனைகளை பாராட்டி விருதுகள் வழங்கப்பட்டது. இதில் பாரதியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர்,சிறந்த மனிதநேய கல்வி சேவகர் திரு அருணாச்சலம் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது திரு ஆபிரகாம் லிங்கன் (தமிழ்நாடு தமிழ் சங்கம் மாநில தலைவர் ) அவர்களால் வழங்கப்பட்டது. இதில் செயலாளர் ரவிக்குமார், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.
