
மாணவர்களின் பாதுகாப்பு சமூக பொறுப்புணர்வு குறித்து விழிப்புணர்வு
பொன்னேரி ஜூலை-8
பொன்னேரி உலகநாத நாராயணசாமி அரசினர் கல்லூரியில் 2026-27 கல்வியாண்டில் இளம் அறிவியல் மற்றும் இளம் வணிகவியல் படிப்புகளில் முதலாம் ஆண்டில் சேர்ந்த மாணவர்களுக்கு. புத்தாக்க பயிற்சி மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு சமூக பொறுப்புணர்வு என்னும் தலைப்பில் ஒத்துழை பயிற்சி கல்லூரி முதல்வர் முனைவர் திருச்சேரன் தலைமையில் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக ஆவடி மகளிர் காவல் துணை கண்காணிப்பாளர் மகேஸ்வரி ஐபிஎஸ் கலந்து கொண்டு மாணவர்கள் பாதுகாப்பு சமூகப் பொறுப்புணர்வு எதிர்காலம் குறித்து எடுத்துரைத்தார் அப்போது தன்னுடைய பள்ளி பருவத்தில் பாடம் நடத்திய ஆசிரியர்கள் கதாநாயகர்கள் கதாநாயகிகள் என்றும் தான் ஐ.பி.எஸ்யில் தேர்ச்சி பெற்றவுடன் முதன் முதலில் தன்னுடைய ஆசிரியருக்கு தெரிவித்து மகிழ்ந்ததாகவும் படிக்கும்போது மிக உற்சாகத்துடன் இந்த பதவியை அடங்கி தீர வேண்டும் என்ற ஒரே இலட்சியத்தை பின்பற்றி படித்ததாகவும் இதனால் ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்றேன் எனவும் இதுவரை நேர்மையாகவும் திறமையாகவும் பணியாற்றி வருகிறேன் என பெருமிதத்துடன் எடுத்துரைத்து மாணவர்களிடத்தில் சட்டம் ஒழுங்கு பெண்களுக்கு எதிரான சவால்கள் குற்றங்கள் இவற்றைத் தீர்க்க தான் மேற்கொண்ட செயல்கள் எடுத்துக்காட்டி மாணவிகள் மாணவர்கள் போதை பொருள்கள் பயன்பாட்டினை தவிர்த்து சமுதாயத்தில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தினார், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உதவி ஆய்வாளர் சோபியா கலந்துகொண்டு தமிழக முதலமைச்சர் அவர்களால் தொடங்கப்பட்ட இந்த படையின் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார் மேலும் பெண்கள் பாதுகாப்பு குறித்தும் போக்சோ சட்டம் குறித்தும் எடுத்துரைத்து சமுதாயத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கிற அனைத்திற்கும் போதை பொருட்கள் பயன்பாடு தான் காரணம் எனக் கூறி மாணவர்களுக்கு போதைப்பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்தினார் இதில் ஒருங்கிணைப்பாளர் மாறவர்மன் வேதியல் துறை தலைவர் கண்ணன். சிங்கப்பெண் அதிரடிப்படை காவலர்கள் முபீனா கோமதி மற்றும் கோவர்தன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்
