
கோவை மாவட்டம்
ஸ்ரீ காமாக்ஷி ஆர்ஷ சம்ஸ்கிருதி டிரஸ்ட் சார்பில், பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள தெய்வப் படங்கள், விக்ரகங்கள் உள்ளிட்ட புனிதப் பொருட்களை முறையாக சேகரித்து மறுசுழற்சி செய்யும் ‘உத்வாசன சேவா’ முகாம் ஆர்.எஸ்.புரம் தி சேவாஸ்ரம் டிரஸ்ட் வளாகத்தில் நடைபெற்றது இதில் தெய்வப் படங்கள், சிலைகள், உலோக பூஜைப் பொருட்கள், ஆன்மிகப் புத்தகங்கள், காலண்டர்கள் உள்ளிட்டவை பொதுமக்களிடமிருந்து சேகரிக்கப்பட்டன கோவையில் நடைபெற்ற முதல் முகாமில் சுமார் 40 டன் புனிதப் பொருட்கள் சேகரிக்கப்பட்டதாக அறக்கட்டளை தெரிவித்தது இதுகுறித்து அறக்கட்டளை நிறுவனர் வசுதா சுந்தர் கூறுகையில், கடந்த 2024-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘உத்வாசன சேவா’ திட்டத்தின் மூலம் புனிதப் பொருட்களை மரியாதையுடன் வழியனுப்பி, அவற்றை மறுசுழற்சி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார் தொடர்ந்து கோவையின் பல்வேறு பகுதிகளிலும் இச்சேவையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.
