
25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வாக்காளர்கள் வரை புதிய ஒன்றியங்கள் அமைக்க விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம். தலைமை கழக பிரதிநிதிகள் புதுவை சிவா,ஜே. வீரமணி பங்கேற்பு -மாவட்ட கழக செயலாளர் செஞ்சி மஸ்தான் சிறப்புரை.
செஞ்சி செப்.10
200 வாக்காளர்களுக்கு ஒரு கிளைக் கழகம் அமைக்க வேண்டும் என விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது கூட்டத்தில் தலைமைக் கழக பிரதிநிதிகள் புதுவை மாநில திமுக அமைப்பாளர் புதுவை சிவா, மாநில மாணவரணி செயலாளர் ஜெ .வீரமணி,விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
விழுப்புரம் வடக்கு மாவட்ட செஞ்சி, மயிலம்,சட்டமன்ற தொகுதிகளுக்கான திமுக செயற்குழு கூட்டம் செஞ்சி திண்டிவனம் சாலை ஊரணித் தாங்கலில் உள்ளசஞ்சனா பேலசில்நடைபெற்றது.
கூட்டத்திற்கு விழுப்புரம் வடக்கு மாவட்ட அவை தலைவர் டாக்டர் சேகர் தலைமை தாங்கினார்.முன்னாள் மத்திய அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன், மாவட்ட துணை செயலாளர்கள் அருணகிரி, அமுதா ரவிக்குமார்,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
செஞ்சி கிழக்கு ஒன்றிய செயலாளர்,ஒன்றிய பெருந்தலைவர் விஜயகுமார் அனைவரையும் வரவேற்றார்.
கூட்டத்தில் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் ,முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டுஆகஸ்ட் 22 அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் கழகத் தலைவர் மு.க .ஸ்டாலின் அவர்களின் தலைமையில் நடைபெற்ற கழக செயற்குழு கூட்டத்தில்கழக மறுசீரமைப்பு பணிகள் குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும்கழக ஆக்கப் பணிகள் குறித்துசிறப்புரை ஆற்றினார்.
தலைமைக் கழக பிரதிநிதிகள் புதுவை மாநில திமுக அமைப்பாளர் புதுவை சிவா, மாநில மாணவரணி செயலாளர் ஜெ. வீரமணி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் தலைமை கழகம் அறிவித்த கட்சி நிர்வாக சீரமைப்பு தீர்மானங்களை செயல்படுத்தும்வகையில் ஒன்றியத்திற்கு அதிகபட்சமாக .30 ஆயிரம்வாக்காளர்கள் முதல் குறைந்தபட்சமாக 25 ஆயிரம்வாக்காளர்கள் எண்ணிக்கையில் ஒன்றியங்கள் அமைப்பதற்கும், 200 வாக்காளர்களுக்கு ஒரு கிளைக் கழகம் அமைப்பதற்கு தலைமைக் கழகம் அனுமதிக்க வேண்டும்,
வருகிற 15-ம் தேதி அண்ணா பிறந்தநாள் விழா, 17ஆம் தேதி தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவிவை சிறப்பாக கொண்டாடுவது ,15ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலத்தில் நடைபெறும் திமுக கழக முப்பெரும் விழாவில் நிர்வாகிகள் திரளாக பங்கேற்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் மாசிலாமணி, சேது நாதன், செந்தமிழ் செல்வன், தலைமை தீர்மான குழு உறுப்பினர் செஞ்சி சிவா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த், செயற்குழு உறுப்பினர் நெடுஞ்செழியன், பொதுக்குழு உறுப்பினர்கள் மணிவண்ணன்,வீடூர் ரவி,சாந்தி ஏழுமலை,ஒன்றிய செயலாளர்கள்விஜயராகவன், பச்சையப்பன், சாந்தி சுப்பிரமணியன், நாராயணமூர்த்தி, அண்ணாதுரை, மொடையூர் துரை,இளம்வழுதி ,ராஜாராமன், மணிமாறன், செழியன்,அனந்தபுரம் நகர செயலாளர் சம்பத், ஒன்றிய பெருந்தலைவர்கள்வல்லம் அமுதா ரவிக்குமார், மயிலம் யோகேஸ்வரி மணிமாறன்,செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலி மஸ்தான்,அனந்தபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் முருகன், ஒன்றிய துணைச் சேர்மங்கள் ஜெயபாலன், விஜயலட்சுமி முருகன்,உள்ளிட்ட மாநில மாவட்ட ஒன்றிய ஊராட்சி கழக நிர்வாகிகள் அனைத்து அணி அமைப்பாளர்கள், தொமுசநிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் செஞ்சி நகர செயலாளர் கார்த்திக் நன்றி கூறினார்.
