
மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி, காவல்துறை மற்றும் தனியார் மருத்துவமனை இணைந்து நடத்திய ஹெல்மெட் விழிப்புணர்வு மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பேரணியை டி.எஸ்.பி. பாலாஜி தலைமை வகித்து கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மயிலாடுதுறை நகர பூங்காவில் இருந்து புறப்பட்ட பேரணி, தலைமை தபால் நிலையம், மணிக்கூண்டு வழியாகச் சென்று தனியார் மருத்துவமனையை அடைந்தது.
பேரணியில் 200-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் கலந்துகொண்டு “போதைப் பொருளை ஒழிப்போம், ஆரோக்கியமான நாட்டை உருவாக்குவோம், தலைக்கவசம் அணிந்து உயிரை காப்போம்” என விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர்.
இதில் இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார், கல்லூரி முதல்வர் சுவாமிநாதன், மருத்துவமனை நிர்வாக இயக்குநர் வினோத்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
