
இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான வேட்பாளர்களுக்கு ஆதித்தமிழர் பேரவையின் முழுமையான ஆதரவு
இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்ற கழக தலைமையிலான வேட்பாளர்களுக்கு ஆதித்தமிழர் பேரவையின் முழுமையான ஆதரவு , நடைபெற உள்ள தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிகளில் கிடைத்ததில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர்கள் தேர்தலில் வெற்றி பெற ஆதித் தமிழர் பேரவை தனது முழுமையான ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது. அருந்ததியர் மக்களின் சார்பாக நடைபெற உள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்ற கழக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக ஆதித் தமிழர் பேரவை முழுமையான களப்பணியில் ஈடுபட்டு தேர்தல் பணிகளை சிறப்பாக மேற்கொள்ளும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். சமூக நீதி, சமத்துவம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணி வெற்றி பெறுவதற்கு அருந்ததியர் மக்களின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் முழுமையாக திரட்டி களப்பணிய்ற்றுவோம் என உறுதி அளிக்கிறோம்.
