
ஏலகிரி மலையில் உள்ள ஏ. ஜி. எஸ். ரிசார்ட்டில் 12/09/2026 அன்று காலை 11 மணியளவில் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் முப்பெரும் விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கே. ஆர். நந்தகுமார் தலைமை தாங்கினார், மாநிலத் தலைவர் பேராசிரியர் கனகராஜ் முன்னிலை வகித்தார். திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் என். திருப்பதி. கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் முகுந்தன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறந்த பள்ளிகளுக்கான விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றினர்.
விழாவில் மாநில பொருளாளர் விமல், மாநில துணைப் பொதுச் செயலாளர் சண்முகம், மாநில கல்வி ஆலோசகர் எவர்வின். புருஷோத்தமன் மற்றும் சங்க நிர்வாகிகள் பலரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
விழாவில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் 120 நாள் நல்லாட்சியில் யாருக்கும் எதற்கும் லஞ்சம் தராமல் ஒளிவு மறைவு இல்லாமல் அனைத்து பணிகளும் நேர்மையாக செயல்படுவதை பாராட்டுகின்றோம். தனியார் பள்ளிகளின் அங்கீகாரம், தொடர் அங்கீகாரம் ஆகியவற்றிற்கு எவ்வித எதிர்பார்ப்பு மின்றி விண்ணப்பித்தவுடன் உடனுக்குடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் கைகளால் எவ்வித லஞ்ச லாவண்யமும் இல்லாமல் வழங்கப்படுவது வரவேற்கின்றோம்.
2. தமிழகத்தில் Planing Area, Non Planing Area என அனைத்து பகுதிகளிலும் செயல்படும் பள்ளிகளுக்கு G.O. No.76 ன் படி உள்ளது உள்ளபடி அனைத்து பள்ளிகளுக்கும் DTCP, CMDA அனுமதிகளை வழங்க வேண்டும்.
3. DTCP, CMDA அனுமதி இல்லாத பள்ளிகளுக்கு நிறுத்தப்பட்டுள்ள அங்கீகாரம்,தொடர் அங்கீகாரம் ஆகியவற்றை உடனே வழங்க வேண்டும்.
4. கடந்த ஆட்சியில் அரசாணை வெளியீட்டும் அங்கீகாரத்திற்காக காத்துள்ள நர்சரி பிரைமரி பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த வேண்டும்.
5. 2025-26 ஆண்டிற்கான RTE கல்வி கட்டண பாக்கியை உடனே விடுவிக்க வேண்டும்.
6. கடந்த ஆட்சியில் L.K.G., U.K.G. மாணவர்களுக்கு RTE கட்டணமாக ரூபாய் 6000 மட்டுமே நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. தற்போது அதை மாற்றி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்று அரசு ஒரு மாணவனுக்கு எவ்வளவு செலவு செய்கிறதோ அந்த தொகையை வழங்க வேண்டும்.
7.
கடந்த ஆட்சியில் ரத்து செய்யப்பட்ட 11 ஆம் வகுப்பு பொது தேர்வு மீண்டும் நடத்த வேண்டும். மாணவர்களின் மேல்நிலைக் கல்வியை தரம் உள்ளதாக மாற்ற வேண்டும்.
8. கடந்த ஆட்சியில் கல்வி நிலையங்களுக்கு 150% ஆக நிர்ணயிக்கப்பட்ட சொத்து வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
9. சமூகவிரோதிகளிடமிருந்து தனியார் பள்ளிகளை பாதுகாக்க தனியார் பள்ளிகள் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
10. T.C. இல்லாமல் எந்த மாணவனும் எந்த வகை பள்ளியிலும் சேர்க்கப்பட கூடாது. இதற்கு கடுமையான உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.
11. மாநில மற்றும் தேசிய அளவில் வழங்கப்படும் நல் ஆசிரியர் விருதுகள் நர்சரி பிரைமரி, மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு மாவட்டத்திற்கு மூன்று பேருக்கு வழங்க வேண்டும்.
12. தீர விசாரிக்காமல் பொய்யான புகாரை வைத்து Pocso வழக்கு போடுவது தடுக்க வேண்டும்.
13. தனியார் பள்ளிகளுக்கு கல்வி கட்டணம் நிர்ணிப்பதில் நிர்ணயிப்பதில் உள்ள குளறுபடிகளை நீக்க வேண்டும்.
14. தமிழக மக்கள் தரமான கல்வி பெற தேசிய கல்விக் கொள்கையை அமுல்படுத்த வேண்டும், மும்மொழி கல்வி திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், நவோதயா பள்ளிகள் திறக்க வழி காட்ட வேண்டும்.
15. CSR Fund நிதி தனியார் பள்ளிகளின் மேம்பாட்டிற்கு பயன்படுத்த உதவிட வேண்டும். உள்ளிட்ட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
விழாவிற்கான ஏற்பாடுகளை மாவட்டத் தலைவர் S.ராமானுஜம், மாவட்ட செயலாளர் ஏலகிரி செல்வம், பொருளாளர் மணி, மாநில செய்தி தொடர்பாளர் செந்தில்குமார் ஆகியோர் செய்து இருந்தனர்.
