
சேலம்
காந்தி ஜெயந்தி முன்னிட்டு வாழப்பாடியில் பேருந்து நிலையம் அருகில் ரோட்டரி கிளப் ஆப் சேலம் டிவைன் ஹார்ட்ஸ் மற்றும் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் சேலம் கிழக்கு சார்பாக போதை பொருள் உபயோகத்தினால் ஏற்படும் விளைவுகள் மற்றும் ஹெல்மெட் அணிவதன் அவசியம் பற்றிய துண்டறிக்கையை வழங்கி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் மூன்று சக்கர வாகனத்தில் வந்த 10 மாற்றுத் திறனாளிகளுக்கு தலை கவசம் இலவசமாக வழங்கப்பட்டது.
இதில் சிறப்பு விருந்தினராக வாழப்பாடி காவல் உதவி ஆய்வாளர் முருகேசன் ரோட்டரியன், ஹீரோ செந்தில்குமார் மாவட்ட உறுப்பினர் குழுத்தலைவர் ரோட்டரியன் மாவட்டம் 2982 பழனிச்சாமி மேலாளர் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சேலம் முனைவர் பெ. பெரியார் மன்னன் அரிமா சங்கத் தலைவர் வாழப்பாடி ரோட்டரி கிளப் ஆப் சேலம் டவைன் ஹார்ட்ஸ் தலைவர் ரோட்டரியன். மணிகண்டன் ரோட்டரியன். ஜெய்சங்கர் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் (சேலம் கிழக்கு ) தலைவர் கூத்தன் செயலாளர் வேலுசாமி பொருளாளர் வேல்முருகன் நிர்வாகக்குழு உறுப்பினர் முருகன் மணிகண்டன் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
