தமிழக காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் வெளியிட்டுள்ள அறிக்கை: கேரள காங்கிரஸ் கமிட்டி மூத்த தலைவர்களில் ஒருவரும், கேரள மாநில முதல்வராக 2 முறை பதவி வகித்தவருமான உம்மன் சாண்டி (வயது79) உடல் நலக்குறைவு காரணமாக  மறைந்தார் என்கிற செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.

   உம்மன் சாண்டியுடன் பழகும் வாய்ப்பும், பயணிக்கும் தருணங்களும் எனக்கு கிடைத்தன. மிக எளிமையான மனிதர் அவர். நம் பெருந்தலைவர் காமராஜரைப் போன்று, ஏழை, எளிய மக்கள் மற்றும் கேரள மாநிலத்தின் வளர்ச்சிக்காக அயராது பாடுபட்டவர் அவர். எல்லோரிடமும் அன்பாகப் பழகக்கூடிய நற்பண்பாளராகவும் இருந்தார். அவரது இழப்பு, கேரள மாநிலத்துக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த நாட்டுக்குமே பேரிழப்பு. அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.