திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் அருகில் அனைத்திந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கம்  மற்றும் தமிழ்நாடு ஊடக மக்கள் சங்கம் சார்பில் பத்திரிகையாளர்கள், சமூக  ஆர்வலர்கள் கலந்துகொண்டு மணிப்பூர் மாநிலத்தில் பெண்களை நிர்வாணப்படுத்திய கொடும்பாவிகளையும்

பாலியல் வன்புணர்வு செய்த அரக்கர்களையும்  கண்டித்து   கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 இந்நிகழ்வில்  அனைத்திந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கம் திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் ப.உதயன் ஆ.இளங்கோவன், ஷாஜாகான், பிரகதீஸ்வரன், ஆர்.ரெத்தீஷ் ஆர். சந்திரசேகரன், முத்துச்சாமி, கோபால்,ரமேஷ், முருகன், மற்றும் தமிழ்நாடு ஊடக மக்கள் சங்கம் மாநில பொருளாளர் கே. தங்கப்பாண்டி  மற்றும் ஒட்டன்சத்திரம் தாலுகா தலைவர் மு.செல்வராஜ்   ஒட்டன்சத்திரம் தாலுகா செயலாளர் ஆ.அழகர்சாமி , ஒட்டன்சத்திரம் தாலுகா பொருளாளர் கோ.நாட்டுத்துரை, சமூக ஆர்வலர்கள் தலித் சுப்ரமணியன், கல்லை மு.தா.ஈஸ்வரவேந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற வன்கொடுமை செய்த கயவர்கள் கண்டித்து கண்டன  கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில்  தன்னார்வலர்களும், சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டனர். மேலும் பாதுகாப்பு வழங்கிய ஒட்டன்சத்திரம் காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்தனர்.