தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம். திருநெல்வேலி மின் பகிர்மான வட்டம். தென்காசி மாவட்டத்தில். சங்கரன்கோவில் நகர்புறம் 1 பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட அருள்தரும் கோமதி அம்பாள் சமேத அருள்மிகு சங்கரநயினார் திருக்கோவில் ஆடித்தபசு  கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் ஆறாம் திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின்.சார்பாக தென்காசி மாவட்டம்  கலைவாணர் கலைக்குழு பொன் ஆனந்தராஜ் தலைமையில் மின்துறை அமைச்சர் அறிவிப்பின்படி மின் இணைப்பு பெயர் மாற்றம் மேளா,  மற்றும் மின்சார பாதுகாப்பு , மின்சார சிக்கன பயன்பாடு ஆகியவை விளக்கும் கிராமிய கலைநிகழ்ச்சி, தப்பாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் சங்கரன்கோவில் மேலரதவீதி, எல்ஐசி முன்பு, புதிய நகராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வினை  சங்கரநாரயணசுவாமி திருக்கோவில் துணை ஆணையர் ஜான்சிராணி நிகழ்ச்சியினை  துவக்கிவைத்தார். மற்றும் தர்மலிங்கராஜா, கோமதி சங்கர், கலந்து கொண்டு சிறப்பித்தனர்.  நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் முழுவதையும் சங்கரன்கோவில் நகர்ப்புற பிரிவு ஒன்று உதவி மின் பொறியாளர் கருப்பசாமி ,மற்றும் பணியாளர்கள் தங்கமாரிமுத்து, பொன்சுப்புராஜ், அரிராஜ்,  ராமமூர்த்தி, செல்லசாமி  முருகன், பேச்சி முத்து, மோகன்தாஸ் , இராஜராஜன், முருகன்  பணியாளர்கள் சுப்பிரமணி, மயில் ராஜன், நாகராஜ், லட்சுமணன், ஆகியோர்  செய்திருந்தனர்.