சேலத்தில் தெய்வீகத் தமிழ்ச் சங்கம் அறக்கட்டளை மற்றும் அர்த்தநாரீஸ்வர வர்மா கலை இலக்கிய பேரவை இணைந்து அர்த்தநாரீஸ்வரர் வர்மா வின் 150 வது பிறந்தநாள் விழா, மற்றும் முப்பெரும் விழா சுகவனேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள தனியார் மண்டபத்தில் தெய்வீக தமிழ் சங்கம் அறக்கட்டளை தலைவர் ராமன் தலைமையில் நடைபெற்றது. இதில் பொருளாளர் ஸ்ரீதர் நரசிம்மன் வரவேற்புரை ஆற்றினார். சுவாமி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலை பள்ளியின் தாளாளர் முருகேசன் திருக்குறள் முற்றோதலை துவக்கி வைத்தார். தெய்வீக தமிழ் சங்க அறக்கட்டளை நிறுவனர் வீரபத்ரானந்த புரி, அர்த்தநாரீஸ்வர வர்மா கலை இலக்கிய பேரவை தலைவர் பா.மா. ஆறுமுகம், ஆன்மீக சிற்பி டாக்டர் சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் சமூக ஆர்வலர் சுதந்திரராசு, அன்பு வழி அறக்கட்டளை அசோகன், இளம்பிள்ளை மணிகண்டசாமி மற்றும் தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். முப்பெரும் விழாவில் திருக்குறள் முற்றோதல் நிகழ்ச்சியில் 10 பள்ளிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு திருக்குறள் ஒப்பிவித்தனர். இதில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவித்தனர்