–
மதுரையில் அதிமுக எழுச்சி மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றதைத் தொடர்ந்து திருநெல்வேலி அதிமுக மாவட்டச் செயலாளர் தச்சை. என்.கணேசராஜா, நெல்லை மாவட்டம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்களுக்கு பிரியாணி விருந்து கொடுத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாநில அதிமுக அமைப்புச் செயலாளர் வீ.கருப்பசாமி பாண்டியன், அம்மா பேரவை துணைச் செயலாளர் மைக்கேல் ராயப்பன், முன்னாள் எம்.எல்.ஏ., ஆர்.பி.ஆதித்தன், முன்னாள் துணை மேயர் ஜெகநாதன் என்ற கணேசன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் பால்துரை, மாவட்ட சிறுபான்மைப் பிரிவு செயலாளர் மகபூப்ஜான், திசையன்விளை பேரூராட்சித் தலைவியும், மாவட்ட மகளிர் அணிச் செயலாளருமான ஜான்சிராணி, மேலப்பாளையம் கிழக்கு பகுதிச் செயலாளர் சண்முககுமார், நெல்லை பகுதிச் செயலாளர் காந்தி வெங்கடாசலம், பாளையங்கோட்டை வடக்கு பகுதிச் செயலாளர் வழக்கறிஞர் ஜெனி, பாளை. பகுதி மாணவரணிச் செயலாளர் ஜெய்சன் புஷ்பராஜ், அதிமுக நிர்வாகிகள் சம்சு சுல்தான், வழக்கறிஞர் அன்பு அங்கப்பன், திசையன்விளை நகர கழகச் செயலாளர் ஜெயக்குமார், வள்ளியூர் கழக பொருளாளர் இந்திரன் விஜய், மாமன்ற உறுப்பினர் முத்துலட்சுமி, சண்முக பாண்டியன், முன்னாள் மண்டலத் தலைவர் மாதவன், வட்டச் செயலாளர்கள் குலவணிகர்புரம் ஆர்.ஜெகநாதன், மேலப்பாளையம் குறிச்சி ஜி.சண்முகசுந்தரம், பாளையங்கோட்டை முத்துக்குமார், அதிமுக பக்தர் தொழில் அதிபர் பாளை. எம்.கச்சிமுகமது உள்பட பலர் கலந்து கொண்டனர்