
சென்னை, பிப். 2025
இந்திய பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம் (IPMA), 2025-26-ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை முன்னேறிய மற்றும் எதிர்காலத்தை நோக்கிய நிதித் திட்டம் எனப் பாராட்டியுள்ளது. இது பம்ப் உற்பத்தித் துறைக்கு முக்கியமான பலன்களை வழங்கும் என்றும் கருத்து தெரிவித்துள்ளது.
ஐ.பி.எம்.ஏ. அமைப்பின் தலைவர் திரு. கே.வி. கார்த்திக், “விவசாயம், நீர் கட்டமைப்பு மற்றும் உள்ளூர் தொழில்துறை மேம்பாட்டில் அரசின் வலுவான கவனம், இந்திய பம்ப் உற்பத்தியாளர்களுக்கு நல்ல வளர்ச்சி வாய்ப்புகளை வழங்கும்” என்று குறிப்பிட்டார்.
“கிசான் கடன் ரூ. 2 லட்சம் அதிகரிப்பு விவசாய பம்புகளுக்கான தேவையை உயர்த்தும். விவசாயிகளுக்கும், தொழில்துறைக்கும் பலனளிக்கும். ஜல் ஜீவன் மிஷன் (Jal Jeevan Mission) 2028 வரை நீட்டிப்பு, நீர் அணுகலை உறுதி செய்யும், தொடர்ச்சியான வணிக வாய்ப்புகளை உருவாக்கும்” என்று திரு. கார்த்திக் கூறினார்
அணு சக்தி மிஷனில் அரசின் உறுதிப்பாடு, பம்ப் உற்பத்தி துறையை உள்ளடக்கிய இந்திய தொழில்துறைகளுக்கு புதிய வாய்ப்புகளைத் திறக்க உள்ளது.
“இந்த முன்னோடியான முயற்சிகளுடன், நாங்கள் அதிக முதலீடுகள், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் முக்கிய துறைகளில் அதிக வளர்ச்சியை எதிர்பார்க்கிறோம்” என்று திரு. கார்த்திக் மேலும் கூறினார்.