
தலைநகர் டெல்லியில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பாஜக கைப்பற்றி உள்ளது இதனை கொண்டாடும் விதமாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் குமரி கிழக்கு மாவட்ட தலைவர் கோப குமார் தலைமையில் நாகர்கோவில் பாஜக அலுவலகம் மற்றும் அண்ணா பேருந்து நிலையம் முன்பு நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் காந்தி மற்றும் மாவட்ட பொருளாளரும் மாநகராட்சி தெற்கு மண்டல தலைவருமான டாக்டர் முத்துராமன் அவர்கள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி பாஜகவினர் வெற்றிக் களிப்பை கொண்டாடினர் . இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்