![TRICHY](https://ullatchisaral.com/wp-content/uploads/2025/02/TRICHY-1024x838.jpg)
திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறையின்சார்பில் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு மொபைல் ஆப் தொடர்பாக மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் கல்லூரி முதல்வர்களுடனான கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்மா.பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்பது குறித்து விழிப்புணர்வுஉறுதிமொழி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அனைத்து அரசு துறை அலுவலர்கள்ஏற்றுக்கொண்டனர்.இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது;மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், ‘போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழிஎடுத்தல் நிகழ்ச்சி” கடந்த 2024 ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் பள்ளி / கல்லூரிகளில் நடத்தப்பட்டது.திருச்சிராப்பள்ளி மாவட்டத்தினை பொறுத்தவரை 583 பள்ளிகள் மற்றும் 130 கல்லூரிகளில் மாணவ/மாணவியர்கள், பள்ளிஆசிரியர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்களினை கொண்டு ‘போதை மருந்துஎதிர்ப்புக் குழு” ஏற்படுத்தப்பட்டு தொடர்ந்து மாணவ/ மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவருகிறது.பள்ளி மற்றும் கல்லூரிகளினை சுற்றி 500 மீட்டருக்குள் உள்ள கடைகளில் பான், குட்கா மற்றும்போதை தொடர்பான பொருட்கள் விற்கப்பட்டால் உணவு பாதுகாப்புத்துறையின் மூலம் நடவடிக்கைஎடுக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபடும் கடைகளினை நிரந்தரமாக மூடிவைத்திடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.சீல்போதை பொருள் இல்லாத தமிழகத்தினை உருவாக்கிடவும், போதைபொருட்கள் நடமாட்டத்தினைஇரும்புகரம் கொண்டு அடக்கிட மாண்புமிகு தமிழ்நாடு முதல்வரின் அறிவுறுத்தலின் படி, திருச்சிராப்பள்ளிமாவட்டத்தில் மாநகராட்சி / நகராட்சி / பேரூராட்சி ஆகிய பகுதிகளில் வார்டு வாரியாகவும், கிராமவாரியாக தொடர்புடைய துறை அலுவலர்களை கொண்ட கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுதொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. போதை பொருட்கள் விற்பனை தொடர்பான புகார்களுக்குபிரத்யேக தொலைபேசி / செல்லிடைப் பேசி எண்கள் மாநில அளவிலும், மாநகர காவல் ஆணையர்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை ஆகியஅலுவலகங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் வரும் புகார்களின் பேரில் தொடர் நடவடிக்கைஎடுக்கப்பட்டு, புகார் அளிக்கும் நபர்களின் விபரங்கள் இரகசியமாக வைக்கப்படுகிறது.மேலும் கடந்த 2024 நவம்பர் மாதம் ஒன்பதாம் தேதி அன்று ‘போதைபொருட்கள் இல்லாத திருச்சிராப்பள்ளி” என்றுவிழிப்புணர்வு ஏற்படுத்திடும் பொருட்டு மாணவர்கள் மற்றும் மாணவ தூதுவர்களுக்கான பயிற்சிகருத்தரங்கம் முன்னாள் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு கொண்டுநடத்தப்பட்டது.அதனைத் தொடர்ந்து 11 வட்டங்களிலும் 12 கிராமியக் குழுக்களைக் கொண்டு 66 முக்கியபொதுமக்கள் மற்றும் மாணவ / மாணவிகள் கூடும் இடங்களில் கிராமிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்நடத்தப்பட்டு வருகின்றன.இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசின் ‘போதைப் பொருள்கள் இல்லாததமிழ்நாடு” (Drug Free TN) என்ற புதிய செயலினை உருவாக்கி இதனை அனைத்து மேல்நிலை பள்ளிதலைமையாசிரியர் மற்றும் கல்லூரி முதல்வர்கள் மூலம் செயல்படுத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதன்படி அந்த செயலியின் விபரங்கள் அடங்கிய ஸ்டிக்கர் வழங்கப்பட்டுள்ளது.இதனை தத்தம் பள்ளி/ கல்லூரிகளில் மாணவ / மாணவியர்களுக்கு அறியும் வண்ணம் ஒட்டியும், அனைத்து மாணவமாணவிகளுக்கும் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கேட்டுக் கொள்ளப்பட்டது. ‘போதை பொருட்கள்இல்லாத தமிழகத்தினை உருவாக்கிட தங்களின் பங்களிப்பினை வழங்கிடவும் கேட்டுக் கொள்கிறேன் எனதெரிவித்தார்.(கலால்)இந்நிகழ்வில், உதவி ஆணையர்ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி முதல்வர்கள் உள்ளிட்டஉதயகுமார், மேல்நிலைப் பள்ளி தலைமைஅரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.