
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின் படி கன்னியாகுமரி மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் துறை சார்பாக நாகர்கோவில் டதி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சமுதாய வளைகாப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது . இந்த வளைகாப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் அவர்கள் வருகை புரிந்தார்கள் . அவர்களுக்கு குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா அவர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்கள் . மேலும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் குமரி கிழக்கு மாவட்ட செயலாளரும் நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான ரெ.மகேஷ் அவர்கள் வரவேற்பு அளித்து அமைச்சர் அவர்களுடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திருவிளக்கேற்றி வைத்து சிறப்புரையாற்றி சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். மேலும் அமைச்சர் அவர்கள் பேசுகையில் கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் நல்ல ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உட்கொள்ள வேண்டுமென்றும் கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் நல்ல ஓய்வினை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார் . அதனைத் தொடர்ந்து கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு பொருட்களை வழங்கினார் . இந்நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகர துணை மேயர் , மண்டலத்தலைவர்கள் , மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்